For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் என்று தெரிகிறதா? டேவிட் வார்னரின் கேள்வி.. யுவராஜின் வினோத ஆசை

சிட்னி : தன்னுடைய வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ரசிகர்களை தொடர்ந்து குதூகலப்படுத்தி வருபவர் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்.

Recommended Video

On this day: 2019 WC Semifinal loss After Dhoni’s Run-Out

தற்போது இவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, அதில் நடனமாடும் வீரர்கள் யார் என்று தெரிகிறதா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் டேவிட் வார்னர். இந்நிலையில் அவருடன் ஆடியுள்ள முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், இந்த பதிவில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

6 விக்கெட்டு மட்டும் போதாது... இன்னும் நிறைய வேணும்... அடம்பிடிக்கும் ஹோல்டர்6 விக்கெட்டு மட்டும் போதாது... இன்னும் நிறைய வேணும்... அடம்பிடிக்கும் ஹோல்டர்

டேவிட் வார்னரின் அசத்தல் வீடியோக்கள்

டேவிட் வார்னரின் அசத்தல் வீடியோக்கள்

ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர், சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருபவர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவரின் அலப்பறைகளால் இன்ஸ்டாகிராம் பக்கமே அல்லோல கல்லோல படுகிறது.

ரசிகர்களின் லைக்குகள்

ரசிகர்களின் லைக்குகள்

தொடர்ந்து தான் மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தினரையும் இணைத்துக் கொண்டு, டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி என்று இவர் செய்யும் கூத்துக்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரமே காணப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் இவருடைய வீடியோக்களில் அவ்வப்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

டான்சர்ஸ் யார்?

டான்சர்ஸ் யார்?

இந்நிலையில், தற்போது டேவிட் வார்னர், பழைய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஆடியுள்ள டான்சர்ஸ் யார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகே நமக்கு தெரியவருகிறது அதில் ஆடியிருப்பவர்கள் இலங்கை ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் என்பது.

விருப்பம் தெரிவித்த யுவராஜ் சிங்

விருப்பம் தெரிவித்த யுவராஜ் சிங்

இந்த வீடியோவில் தன்னுடைய கமெண்ட்டை பதிவு செய்துள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனக்கு ஆஷூவின் நடனத்தை பார்க்க விருப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் நடத்தை காணவே அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கமே பரபரப்புக்கு உள்ளானது.

Story first published: Friday, July 10, 2020, 14:35 [IST]
Other articles published on Jul 10, 2020
English summary
David Warner posted a throwback video on Instagram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X