For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேலும் மேலும் சோதனை.. இருந்த ஒரு வாய்ப்பும் போச்சு.. முக்கிய வாய்ப்பை தவறவிடும் சாஹா..இனி பண்ட் தான்

ஐதராபாத்: 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்றும் கொரோனாவில் இருந்து விருதிமான் சாஹா குணமடையாததால் முக்கிய வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.

வீரர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவியது காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

'3' வருட பகை.. மீண்டும் நேருக்கு நேர்.. 'தகதக' மோடில்.. இந்திய மகளிர் கிரிக்கெட்'3' வருட பகை.. மீண்டும் நேருக்கு நேர்.. 'தகதக' மோடில்.. இந்திய மகளிர் கிரிக்கெட்

கொரோனா பாதித்த வீரர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விரிதிமான் சாஹாவும் ஒருவர். அறிகுறிகளுடன் காணப்பட்ட இவருக்கு முதல் 2 பரிசோதனைகளின் போதும் நெகட்டீவ் என வந்த நிலையில் 3வது டெஸ்டில் தொற்று உறுதியானது.

மீண்டும் பாசிட்டீவ்

மீண்டும் பாசிட்டீவ்

கடந்த மே 3ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பெற்று வரும் சாஹா, தற்போது உடல் வலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் எதுவும் இன்றி நலமாக உள்ளார். எனினும் பரிசோதனை முடிவுகள் அவருக்கு சாதகமாக வரவில்லை. கிட்டத்தட்ட 2 வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதும் சாஹாவுக்கு கொரோனா பாசிட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

இங்கிலாந்து டூர்

இங்கிலாந்து டூர்

இந்தியா - நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விருதிமான் சாஹாவும் இடம்பிடித்துள்ளார். எனினும் அவர் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே சக வீரர்களுடன் இங்கிலாந்து பயணிக்க முடியும்.

பிசிசிஐ விதிமுறை

பிசிசிஐ விதிமுறை

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வீரர்கள் மே19ம் தேதிக்குள் மும்பை சென்று அங்கு பிசிசிஐயின் பபுளுக்குள் நுழைய வேண்டும். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளனர். எனவே அதற்குள்ளாக கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டிய கட்டாயத்தில் விருதிமான் சாஹா உள்ளார்.

சிக்கல்

சிக்கல்

விருதிமான் சாஹா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றாலும் அங்கு அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என ரிஷப் பண்ட் ஃபுல் ஃபார்மில் உள்ளார். இதனால் வாய்ப்புகாக காத்திருக்கும் விருதிமான் சாஹா, ஒரு போட்டியில் இடம் கிடைத்தாலும் அதனை சாதூர்யமாக பயன்படுத்தி தனக்கான இடத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையென்றால் அடுத்த சில வருடங்களுக்கு விக்கெட் கீப்பர் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பிவிடுவார்.

Story first published: Friday, May 14, 2021, 19:41 [IST]
Other articles published on May 14, 2021
English summary
Wriddhiman Saha returns positive COVID-19 again, Chances for Participate in WTC is low
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X