For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி டீமை விட்டு போனார்.. எனக்கு சான்ஸ் கிடைச்சுது.. இதுதான் நடந்தது.. உண்மையை சொன்ன இந்திய வீரர்!

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் தற்போது விக்கெட் கீப்பராக இருப்பவர் விரிதிமான் சாஹா.

Recommended Video

Saha reveals how he got his debut along with Dhoni.

அவர் தான் எப்படி அணிக்குள் நுழைந்தேன் என விரிவாக பேசினார். அப்போது தான் தோனிக்கு மாற்று வீரராக வரவில்லை என்றார்.

மாறாக, தோனி அணியை விட்டு சென்றே பின்னே தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், தோனி இருக்கும் வரை தன்னால் ஆட முடியாது என் தனக்கு தெரியும் என்றும் கூறி இருக்கிறார்.

முக்காலா... முக்காபுலா... என்னாது பிரபு தேவா பாட்டுக்கு டேவிட் வார்னர் டான்சா... நல்லாதான்யா இருக்குமுக்காலா... முக்காபுலா... என்னாது பிரபு தேவா பாட்டுக்கு டேவிட் வார்னர் டான்சா... நல்லாதான்யா இருக்கு

தோனிக்கு பின் சாஹா

தோனிக்கு பின் சாஹா

தோனி டெஸ்ட் அணியில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென ஓய்வு பெற்றார். அது வரை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இருந்த விரிதிமான் சாஹா அதன் பின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தற்சமயத்தில் உலகின் சிறந்த டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

முதல் போட்டி வாய்ப்பு

முதல் போட்டி வாய்ப்பு

சாஹா தான் அணியின் எப்படி முதல் போட்டியில் வாய்ப்பு பெற்றேன் என கூறி உள்ளார். தோனி கேப்டனாக இருந்த போதே தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார் சாஹா. தோனி இருக்கும் வரை தன்னால் அணியில் ஆடும் வாய்ப்பை பெற முடியாது என தனக்கு தெரியும் எனவும் கூறி உள்ளார்.

தோனிக்கு மாற்று அல்ல

தோனிக்கு மாற்று அல்ல

"நான் தோனிக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெறவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு சென்ற பின் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் அறிமுகமான டெஸ்டில் விவிஎஸ் லக்ஷ்மன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா அழைக்கப்பட்டார்" என்றார்.

வாய்ப்பு எப்படி?

வாய்ப்பு எப்படி?

"பயிற்சியின் போது, ரோஹித் என்னுடன் மோதினார். எங்கள் இருவருக்குமே காயம் ஏற்பட்டது, ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அதிகமாக காயம் ஆனது. தோனி அப்போது டாஸ் போட போய்க் கொண்டிருந்தார். நான் சுப்பிரமணியம் பத்ரிநாத்துக்கு த்ரோடவுன் செய்து பயிற்சி செய்ய உதவிக் கொண்டு இருந்தேன். அப்போது தோனி தான் செல்லும் வழியில் சாஹா நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றார்" என சாஹா தனக்கு முதல் போட்டியில் எப்படி ஆட வாய்ப்பு கிடைத்தது எனக் கூறினார்.

பயிற்சியாளர் சொன்னதால்..

பயிற்சியாளர் சொன்னதால்..

"தோனி அணியில் இருப்பதால் நீங்கள் விளையாட மாட்டீர்கள் என பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் என்னிடம் கூறியிருந்தார். அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்யுமாறு கூறினார். அதனால், நான் அன்று வலைப் பயிற்சி செய்து விட்டு நேரடியாக டேல் ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோருக்கு எதிராக விளையாடினேன்." என தன் முதல் போட்டி அனுபவத்தை கூறினார்.

தோனியின் திறமை

தோனியின் திறமை

"தோனியின் விக்கெட் கீப்பிங், அவரது பேட்டிங் ஸ்டைல், வினாடிகளில் ஸ்டம்பிங் செய்வது என அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அவர் எனக்கு 2 அல்லது 4 வயது மூத்தவர். தோனி அணியில் ஆடுகிறார் என்றால் நான் ஆட மாட்டேன் என்று எனக்குத் தெரியும்" என அப்போது இருந்த நிலையை விளக்கினார்.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

"அணியில் வெளியில் உட்கார்ந்திருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், அணியில் தோனி இருந்ததால் வேறு வழியில்லை. எனவே, நான் முடிந்தவரை கற்றுக் கொண்டேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டேன்." என்றார் சாஹா.

யார் விக்கெட் கீப்பர்?

யார் விக்கெட் கீப்பர்?

"நாக்பூர் டெஸ்ட் போட்டியின் போது (தன் முதல் டெஸ்ட்) நான் யார் விக்கெட் கீப்பிங் செய்யப் போவது என்று தோனியிடம் கேட்டேன். அவர் "நான் தான் செய்வேன். நீங்கள் ஒரு நல்ல பீல்டர், நீங்கள் சென்று பீல்டிங் செய்யுங்கள்" என்று கூறினார்" என்றார் சாஹா. அதன் பின் தோனி டெஸ்ட் அணியில் ஓய்வு பெற்ற பின் சாஹா அணியில் விக்கெட் கீப்பராக தொடர்ந்து இடம் பெற்றார்.

Story first published: Sunday, May 17, 2020, 20:33 [IST]
Other articles published on May 17, 2020
English summary
Wriddhiman Saha reveals how he got his debut along with Dhoni. He also said that he know he won’t get chance when Dhoni was playing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X