For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னா அடி.. இன்னா அடி... சூப்பரப்பு.. சாஹாவின் அதிரடி.. சச்சின், சாஸ்திரி பாராட்டு

துபாய் : நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 45 பந்துகளில் 87 ரன்களை குவித்தார் அந்த அணியின் விரித்திமான் சாஹா.

அவரின் இந்த அதிரடி ரன் குவிப்பிற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சாஹா, வார்னர் அதிரடி

சாஹா, வார்னர் அதிரடி

ஐபிஎல்லின் 47வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 219 ரன்களை அடித்தது. அணியின் விரித்திமான் சாஹா, டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடி அரைசதங்களை விளாசினர்.

சாஹா அபாரம்

சாஹா அபாரம்

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 131 ரன்களில் சுருண்ட நிலையில் 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் விரித்திமான் சாஹா 45 பந்துகளில் அடித்த 87 ரன்கள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

சச்சின் புகழ்ச்சி

சச்சின் புகழ்ச்சி

இந்திய அணியின் டெஸ்ட் அணிக்காக விளையாடியுள்ள சாஹா, கடந்த 2014 ஐபிஎல்லின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கேகேஆருக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவரது அதிரடி ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சச்சின் ஸ்மார்ட் பேட்டிங் என்று புகழ்ந்துள்ளார்.

ரவி சாஸ்திரி பாராட்டு

ரவி சாஸ்திரி பாராட்டு

இதேபோல உலக அளிவில் சிறந்த விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் மிகவும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை சாஹா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 28, 2020, 17:48 [IST]
Other articles published on Oct 28, 2020
English summary
Saha smashed 12 fours and two sixes for SRH in their 88-run victory over Delhi Capitals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X