ஒரு பவுலர விடல.. காட்டடி காட்டும் பண்ட்.. சதமடித்து அசத்தல்.. அனல் பறக்கும் இண்ட்ரா ஸ்குவாட் மேட்ச்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக நடைபெற்ற இந்திய அணியின் இண்ட்ரா ஸ்குவாட் போட்டியில் இளம் வீரர் ரிஷப் சரவெடி ஆட்டத்தை காட்டியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18ம் தேதி சவுத்தாம்டனில் தொடங்குகிறது.

இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் இண்ட்ரா ஸ்குவாட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

பயிற்சி

பயிற்சி

மிகப்பெரும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது, அதற்கு தயாராகும் விதமாக அணிகள் தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து ‘இண்ட்ரா ஸ்குவாட்' விளையாடுவார்கள். அந்த வகையில் விராட் கோலி தலைமையில் ஒரு அணியும் கே.எல்.ராகுல் தலைமையில் இன்னொரு அணியும் பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிரடி சதம்

அதிரடி சதம்

முதல் நாள் போட்டியை போன்றே 2வது நாள் ஆட்டத்திலும் ரிஷப் பண்ட் அதிரடியை தொடர்ந்துள்ளார். அஸ்வின், இஷாந்த் சர்மா என அனைத்து பவுலர்களின் ஓவர்களையும் தெறிக்கவிட்ட பண்ட், 94 பந்துகளில் 121 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதே போல ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்களை விளாசியுள்ளார். கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருந்த நிலையில அவரின் அட்டகாசமான ஆட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இதே போல ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

பவுலிங்

பவுலிங்

பந்துவீச்சை பொறுத்தவரை சீனியர் வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இஷாந்த் சர்மா 36 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதே போல ஆவேஷ் கானின் பந்துவீச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. புஜாராவுக்கு எதிராக அவர் வீசிய நிறைய பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு மிக நெருக்கமாக சென்றது.

 விராட் கோலி பவுலிங்

விராட் கோலி பவுலிங்

இதில் மற்றொரு சுவாரஸ்யம் நடந்துள்ளது. கேப்டன் விராட் கோலியும் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எதிரணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது அவருக்கு எதிராக விராட் கோலி பந்துவீசினார். இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI shares highlights of Day 2 of intra-squad match, Rishabh Pant smashes with a ton
Story first published: Sunday, June 13, 2021, 14:12 [IST]
Other articles published on Jun 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X