For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்கள்..வாய்பை இழக்கும் இளம் வீரர்கள்,முக்கிய போட்டியில் ஏற்படும் மாற்றம்

அகமதாபாத்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற பெரும் உதவியாக இருந்த 5 முக்கிய வீரர்களுக்கு இறுதிப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடனான தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் அனுபவ வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 இளம்படை

இளம்படை

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணியில் ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்டோர் காயமடைந்ததால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு செல்ல வழிவகுத்த இந்த இரண்டு போட்டியிலும் அனுபவ வீரர்களே தடுமாறிய நிலையில் இளம் வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருக்கமாட்டார்கள் என தெரிகிறது.

நட்டு

நட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வலைப்பயிற்சி பவுலராக சென்ற நடராஜனுக்கு, ப்ரிஸ்பேன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் பற்றாக்குறை காரணமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 2 விக்கெட்களை எடுத்து அவர் வியக்கவைத்தார். எனினும் முன்னணி வீரர்கள் இருப்பதால் அவருக்கு இறுதிப்போட்டியில் வாய்ப்பு கொடுப்பது சந்தேகம் தான்.

அக்‌ஷர்

அக்‌ஷர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அக்‌ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுக தொடரிலேயே 27 விக்கெட்களை எடுத்து அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றார். எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜடேஜா அணிக்கு திரும்புவார் என்பதால் அக்‌ஷருக்கான வாய்ப்பு குறைவு.

சுந்தர்

சுந்தர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே அவர் 62 ரன்கள் அடித்தார். அதை தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் டெஸ்டில் 85 மற்றும் கடைசி டெஸ்டில் 96 ரன்களும் எடுத்து அசரடித்தார். இருப்பினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்‌ஷர் வரிசையில் இருப்பதால் சுந்தருக்கான வாய்ப்பு குறைவு.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

மெல்பேர்ன் டெஸ்ட் மூலம் அறிமுகமான சிராஜ், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் சிறப்பாக பந்து வீசினார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 17 விக்கெட்களை அவர் எடுத்தார். இருப்பினும், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஷ் குமார் ஆகியோர் அணிக்கு திரும்பினால், சிராஜுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது குறைவே.

 ஷர்துல்

ஷர்துல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறப்பாக ஆடிய அவர் பவுலிங்கில் 3 விக்கெட்டும் பேட்டிங்கில் 67 ரன்களும் எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். எனினும் முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்புவதால் நடராஜனை போல இவருக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Story first published: Wednesday, March 10, 2021, 11:38 [IST]
Other articles published on Mar 10, 2021
English summary
5 young Star Players, who may not get spot in WTC India XI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X