இங்கிலாந்தில் ஒலித்த தமிழ்.. ரசிகர்களிடம் தினேஷ் கார்த்திக் பேசிய வார்த்தைகள்.. வைரலாகும் வீடியோ!

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பக்கம் ரசிகர்களின் பார்வை திரும்பிய நிலையில் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சீரான இடைவெளியில் ரன்களை சேர்த்து வருகிறது.

இணையத்தில் ட்ரெண்டிங்

இணையத்தில் ட்ரெண்டிங்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதற்கு காரணம் அவரின் கமெண்ட்ரி தான். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட் கமெண்ட்ரிகளை கொடுத்து வருகிறார். அந்தவகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கமெண்ட்ரி கொடுக்க இங்கிலாந்து சென்றுள்ளார்.

கமெண்ட்ரி

கமெண்ட்ரி

அவரின் ட்ரஸ்ஸிங் ஸ்டைல், ஹேர்ஸ்டைல் முதல் கண்ணாடி வரை அனைவரையும் வியக்கவைத்தது. இதுமட்டுமல்லாமல் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் சக வர்ணனையாளர் நாசர் ஹுசைனை கலாய்த்து தள்ளியது பெரிய அளவில் பேசப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின் போது நாசர் ஹுசைன், ரோகித் ஷர்மா ஷார்ட் பந்தை அடிப்பதில் சிறந்தவர். சூழலுக்கு எதிராக அவர் தனது கால்களை நன்கு பயன்படுத்துகிறார் எனத்தெரிவித்தார் இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், ஆமாம், அப்படியே உங்களுக்கு நேர் எதிராக உள்ளார் என்று கலாய்த்தார். இது இணையத்தில் படு வைரலானது.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் இந்தியா - நியூசிலாந்து போட்டியை காண சவுத்தாம்டன் மைதானத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பால்கனியில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக்கை கண்ட அவர்கள், DK அண்ணா என அழைத்தனர். இங்கிலாந்தில் தமிழ் மொழியை கேட்ட உடனேயே திரும்பி பார்த்த தினேஷ் கார்த்திக், நல்லா இருக்கீங்களா எனக்கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளிக்க, பின்னர் ‘மழை வருது, இங்க என்ன செய்றீங்க வீட்டுக்கு போங்க' என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் ஸ்கோர்

இந்திய அணியின் ஸ்கோர்

மழையின் குறுக்கீடு காரணமாக முதல் நாள் ஆட்டம் தடைபட்ட நிலையில் 2 மற்றும் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி சீரான வேகத்தில் ரன்களை குவித்து வருகிறது. தற்போது வரை இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. துணை கேப்டன் ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை உயர்த்தி வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Commentator Dinesh Karthik speaking tamil with Tamil fans from the balcony in WTC Final match between India and newzealand
Story first published: Sunday, June 20, 2021, 17:20 [IST]
Other articles published on Jun 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X