இந்திய ப்ளேயிங் 11ல் மாற்றம்? வெளியேறும் வீரர் யார்? சேர்க்கப்படும் வீரர் யார்? - முழு விவரம் இதோ!

இங்கிலாந்து: சவுத்தாம்டனில் மழைப்பொழிவு அதிகளவில் ஏற்பட்டதால் இந்திய அணியின் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்கவிருந்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் போட்டி கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கான ப்ளேயிங் 11- ஐ நேற்றே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதன்படி இந்திய அணி பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா என 3 வேகப்பந்துவீச்சாளர்களும் அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 ஸ்பின்னர்களையும் கொண்டு திட்டம் அமைத்தது. இந்த பவுலிங் படையை தான் கிரிக்கெட் வல்லுநர்களும் பரிந்துரைத்தனர்.

மழையின் தாக்கம்

மழையின் தாக்கம்

இந்நிலையில் சவுத்தாம்டனில் நல்ல மழை பெய்துள்ளதால் பிட்ச்சனாது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகியுள்ளது. பிட்ச்-ல் ஈரப்பதம் இருந்தால் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். ஆனால் இந்த களம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வறண்ட் பிட்ச்கள் தான் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடும். எனவே இந்திய அணி தற்போது இருக்கும் தனது ப்ளேயிங் 11ல் மாற்றம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் உட்காரவைக்கப்படுவார்

யார் உட்காரவைக்கப்படுவார்

இந்திய அணி அப்படி ப்ளேயிங் 11ல் மாற்றம் ஏற்படுத்தினால் ஜடேஜாவை வெளியில் உட்காரவைக்கும். ஏனென்றால் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார். ஜடேஜாவுக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் அல்லது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இந்திய அணி தேர்ந்தெடுக்கும். அது யாராக இருக்கும் என்ற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டால் முதல் தேர்வாக முகமது சிராஜ் உள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் ‘மீடியம் பேஸ்' எடுபடும் என்பதால் இவர் சரியாக இருப்பார். ஏற்கனவே இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக அவர் சேர்க்கப்படவிருந்ததாக கூறப்பட்டது. பின்னர் அனுபவத்தை கணக்கில் கொண்டு அவர் உட்காரவைக்கப்பட்டார். இந்நிலையில் 4வது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் சிராஜ் தான் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. இதே போல பேட்ஸ்மேன் சேர்க்கப்பட்டால் ஹனுமா விஹாரி முதல் தேர்வாக உள்ளார். ஏனென்றால் இங்கிலாந்தில் ஹனுமா விஹாரிக்கு ஓரளவிற்கு அனுபவம் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rain Spoils the Team India's Bowling Plans, If BCCI Changing the Playing 11, Siraj will be the Next choice for Bowling
Story first published: Friday, June 18, 2021, 21:52 [IST]
Other articles published on Jun 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X