அந்த ஒரு விஷயம் செய்தால் போதும்..ஜட்டு-க்கு இருக்கும் பெரிய வாய்ப்பு..மிகப்பெரும் மைல்கல்லை எட்டலாம்

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா மிகப்பெரும் சாதனையை படைக்கவுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான் ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் என்றால் உடனே நினைவுக்கு வருவது போல ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இவரின் தற்போதைய செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்தது. அந்தாண்டில் அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே அவ்வளவாக கிடைக்கவில்லை.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

பவுலிங், ஃபீல்டிங் என படு சொதப்பல் செய்து வந்தார். இதனால், XI அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்தார். பின்னர் கடும் பயிற்சிக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது ஃபார்மை நிரூபித்து கம்பேக் கொடுத்தார். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

மைல்கல்

மைல்கல்

இந்நிலையில் இந்த போட்டியில் மிகப்பெரும் மைல்கல்லை எட்ட ஜடேஜாவுக்கு வாய்ப்புள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா இதுவரை 1,954 ரன்கள் அடித்து 220 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 46 ரன்கள் அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்களை கைப்பற்றிய 5ஆவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெறுவார். முதல் 4 இடங்களில் இயான் போதம் (40 டெஸ்ட்), இம்ரான் கான் (50 டெஸ்ட்), கபில் தேவ் (50 டெஸ்ட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (50) ஆகியோர் உள்ளனர்.

பேட்டிங் ஃபார்ம்

பேட்டிங் ஃபார்ம்

டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்பின்னர்களுக்கு விக்கெட் கிடைப்பது சிரமம் என பேச்சுக்கள் எழுந்து வந்தாலும், ஜடேஜா கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் அணியில் 7வது வீரராக பேட்டிங்கிற்கு அவர் உதவுவார் என்பதால் தான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravindra Jadeja Need 46 runs to joining Kapil Dev, Anil Kumble in a list of in a list of elite double Milestone
Story first published: Wednesday, June 16, 2021, 21:05 [IST]
Other articles published on Jun 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X