For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டியின் நடுவே அவசர அவசரமாக ரூமுக்கு சென்ற பும்ரா.. மைதானத்தில் கலாய்த்து ரசிகர்கள்.. காரணம் என்ன?

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா செய்த தவறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வில்லியம்சனை வீழ்த்த இதுதான் ஒரே வழி.. நெருக்கமானவர் கொடுத்த சூப்பர் ஐடியா..இந்திய பவுலர்கள் முயற்சிவில்லியம்சனை வீழ்த்த இதுதான் ஒரே வழி.. நெருக்கமானவர் கொடுத்த சூப்பர் ஐடியா..இந்திய பவுலர்கள் முயற்சி

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ஏமாற்றம் கொடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா பொதுவாக எந்த களமாக இருந்தாலும் மிக விரைவில் விக்கெட் எடுத்து கொடுக்க கூடியவர். ஆனால் சவுத்தாம்டன் பிட்ச் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போதிலும் சரியான லெந்தில் பந்துவீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

மீண்டும் பழைய ஃபார்ம்

மீண்டும் பழைய ஃபார்ம்

இன்று தொடங்கிய 5வது நாள் ஆட்டத்திலும் முதலில் சில பந்துகளை மிக ஷார்ட் லெந்த்தில் அவர் வீசி சொதப்பினார். பின்னர் அதனை சரிசெய்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை மீண்டும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு இந்த முறை அவர் ஜெர்ஸியை தவறாக அணிந்து வந்தது தான் காரணம்.

பும்ரா செய்த தவறு

பும்ரா செய்த தவறு

இன்றைய போட்டி தொடங்கும் போது ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து வராமல், இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடினார். மேலும் அதே ஜெர்ஸியை அணிந்துக்கொண்டு ஒரு ஓவரும் வீசினார். பின்னர் ரசிகர்கள் பார்த்து கண்டுபிடித்தவுடன் போட்டிக்கு இடையே ஓய்வறைக்கு சென்று தனது ஜெர்ஸியை மாற்றி வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெர்ஸியின் வித்தியாசம் என்ன?

ஜெர்ஸியின் வித்தியாசம் என்ன?

ஒவ்வொரு அணியின் டெஸ்ட் ஜெர்ஸியிலும் நாடுகளின் பெயர் ஓரத்தில் அச்சிடப்பட்டு, ஸ்பான்சர்களின் பெயர் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், வீரர்களின் ஜெர்ஸியின் மையப் பகுதியில் தான் நாடுகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஸ்பான்சர்களின் பெயர்கள் ஜெர்ஸியின் வேறு ஏதாவது பகுதியில் தான் இடம்பெற்றிருக்க வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடப்பதால் பும்ரா தவறுதலாக வழக்கமான ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடிவிட்டார்.

Story first published: Tuesday, June 22, 2021, 18:27 [IST]
Other articles published on Jun 22, 2021
English summary
Indian Pacer Jasprit Bumrah wears wrong jersey on WTC Final Day 5, and rushes to change it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X