22 வீரர்களுமே வெற்றியாளர்கள் தான்.. கேன் வில்லியம்சனின் பெருந்தன்மை.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்றது குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் மனம் உருகியுள்ளார்.

மழையினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த இந்த போட்டி ரிசர்வ் டே எனப்படும் 6வது நாளில் முடிவடைந்தது.

இவ்வளவு ஏளனமா? நியூசிலாந்தின் வெற்றி.. வாகன் போட்ட ஒற்றை ட்வீட்.. கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்! இவ்வளவு ஏளனமா? நியூசிலாந்தின் வெற்றி.. வாகன் போட்ட ஒற்றை ட்வீட்.. கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!

இதில் இந்திய அணி நிர்ணயித்த 139 ரன்கள் என்ற இலக்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து கோப்பையை தட்டிச்சென்றது.

சாம்பியன்ஸ்

சாம்பியன்ஸ்

முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்து நியூசிலாந்து அணியையும் 249 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியால் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை நியூசிலாந்து அணி சுலபமாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு நன்றி

இந்திய அணிக்கு நன்றி

இந்த வெற்றி குறித்து பேசிய வில்லியம்சன், இது ஒரு வித்தியாசமான உணர்வாக உள்ளது. எனது கேப்டன்சியில் ஒரு கோப்பையை கொண்டு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றுள்ளோம். மிகுந்த சிரமங்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்குபெற்ற 22 வீரர்களும் வெற்றியாளர்கள் தான்.

வில்லியம்சன் மகிழ்ச்சி

வில்லியம்சன் மகிழ்ச்சி

இந்த வெற்றி நீண்ட வருடங்களுக்கு நிலைத்து நிற்கும். இந்திய அணி அனைத்து களங்களிலும் எவ்வளவு சிறப்பான அணி என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் அணியில் அனைவரின் உழைப்பையும், ஈடுபாட்டையும் இந்த போட்டியில் பார்த்திருக்கிறோம். அது மகிழ்ச்சியாக உள்ளது.

லோ ஆர்டர் பேட்ஸ்மேன்

லோ ஆர்டர் பேட்ஸ்மேன்

இது ஒரே ஒரு போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது. இந்த 6 நாட்களில் எந்த அணியும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளும் சமமான பலத்துடன் செயல்பட்டு வந்தது. பின்னர் நாங்கள் சரியான திசையில் சென்றோம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். முதல் இன்னிங்ஸில் சற்று சிரமப்பட்டோம். ஆனால் அணியின் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக விளையாடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kane Williamson Express his Happy feeling to hold the WTC Final Trophy, says its a Special feeling
Story first published: Thursday, June 24, 2021, 14:59 [IST]
Other articles published on Jun 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X