For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வில்லியம்சனை வீழ்த்த இதுதான் ஒரே வழி.. நெருக்கமானவர் கொடுத்த சூப்பர் ஐடியா..இந்திய பவுலர்கள் முயற்சி

சவுத்தாம்டன்: நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனை வீழ்த்த இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் சூப்பர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

செம டைவ்.. எகிறி பிடித்த ஷுப்மன் கில்.. முக்கிய விக்கெட் காலி.. கொண்டாடித் தீர்த்த கோலிசெம டைவ்.. எகிறி பிடித்த ஷுப்மன் கில்.. முக்கிய விக்கெட் காலி.. கொண்டாடித் தீர்த்த கோலி

முதலில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தற்போது வில்லியம்சனின் பேட்டிங்கால் பின்னடைவை சந்தித்து வருகிறது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பான அடித்தளம் அமைத்தது. தொடக்க வீரர்கள் டேவன் கான்வே(54) - டாம் லாதம் (30) ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி போராட்டம்

இந்திய அணி போராட்டம்

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்திருந்தது. 4ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 5ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. விக்கெட்டுகளை எடுத்து இருக்கும் இந்திய அணியின் நம்பிக்கையை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உடைத்து வருகிறார். தற்போது களத்தில் அனுபவ வீரர்களான வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்திய அணி பந்துவீச்சை சாதூர்யமாக சமாளித்து சீரான இடைவெளியில் ரன்களை உயர்த்தி வருகின்றனர். வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்றுவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவு எனக்கூறப்படுகிறது.

லக்‌ஷ்மண் அட்வைஸ்

லக்‌ஷ்மண் அட்வைஸ்

இந்நிலையில் வில்லியம்சன் விக்கெட்டை மிக விரைவாக எடுக்க விவிஎஸ்.லக்‌ஷ்மண் ஐடியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வில்லியம்சனின் சிறப்பம்சமே பந்துகளை உடலுக்கு அருகில் வரவிடாமல் கால்களை நீண்ட தூரத்திற்கு எடுத்து வைத்து முன்கூட்டியே தடுப்பது தான். அதுமட்டுமல்லாமல் எந்தவித குழப்பமும் இன்றி நீண்ட நேரத்திற்கு அவரால் நிதானமாக பந்தை கவனித்து செயல்பட முடியும். எனவே அதனை முதலில் உடைக்க வேண்டும்.

 கவனத்தை சிதறவைக்க வேண்டும்

கவனத்தை சிதறவைக்க வேண்டும்

இந்திய பவுலர்கள் தொடர்ந்து வில்லியம்சனின் உடலுக்கு செல்லும் வகையில் பந்துகளை வீசினால் ட்ரைவ் ஷாட்களை ஆட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் செல்வார். அப்படி பொறுமை இழந்தால் நிச்சயம் தவறான ஷாட் விளையாடி அவுட்டாவார். அதாவது முதல் பந்தில் இருந்தே அவருக்கு அவுட் சைட் ஆஃப்சைட் பந்துகளை போடவேண்டும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 23, 2021, 0:25 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
VVS Laxman Gives Idea for how Indian bowlers can get Williamson's wicket early on WTC Final Day 5
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X