For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த மஞ்ச்ரேக்கர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுவாரஸ்ய முடிவு!

மும்பை: அஸ்வின் பவுலிங் குறித்து குறை கூறிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் ப்ளேயிங் 11.. ஆகாஷ் சோப்ராவின் கணிப்பு.. ரசிகர்கள் குஷி! அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் ப்ளேயிங் 11.. ஆகாஷ் சோப்ராவின் கணிப்பு.. ரசிகர்கள் குஷி!

இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற கேள்வி தற்போது இருந்தே ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கிவிட்டது.

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து களத்தில் பேட்டிங்கை விட பவுலிங் தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியிலும் பேட்டிங்கை விட பவுலிங் படையின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய 3 நட்சத்திர வீரர்களும் 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஒன்றிணைந்துள்ளனர். மேலும் இளம் வீரர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்

வேகப்பந்து வீச்சாளர்

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணித்துள்ளார். அதன்படி பந்துவீச்சில் 4 வீரர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக அவர், முகமது சிராஜை தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் சிராஜின் பவுலிங் சிறப்பாக இருந்தது. பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பான வீரர்கள் தான். ஆனால் சிராஜ் சற்று மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவரை வெளியில் உட்கார வைக்கக்கூடாது.

அஸ்வின் தேர்வு

அஸ்வின் தேர்வு

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜாவை புறக்கணித்துவிட்டு ரவிச்சந்திரன் அஸ்வினை மட்டும் மஞ்ச்ரேக்கர் தேர்ந்தெடுத்துள்ளார். மஞ்ச்ரேக்கரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் சில நாடுகளுக்கு முன்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக செயல்படுவார், அயல்நாடுகளில் அவரின் ஆட்டம் பெரிய அளவில் இல்லை என மஞ்ச்ரேக்கர் குறை கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இங்கிலாந்து களத்தில் அஸ்வினை அவர் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமளித்துள்ளது.

அஸ்வினின் பலம்

அஸ்வினின் பலம்

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இடதுகை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர். உலகில் அதிக முறை இடதுகை வீரர்களின் விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் 200 விக்கெட்களுக்கு மேல் எடுத்து அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். அதன்படி பார்த்தால் நியூசிலாந்து அணியில் இடது கை வீரர்கள் டாப் ஆர்டரில் உள்ளனர். இதன் காரணமாகவே அஸ்வினை மஞ்ச்ரேக்கர் தேர்ந்தெடுத்திருப்பார் எனக்கூறப்படுகிறது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

பேட்டிங்கை பொறுத்தவரை அனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விஹாரி சிறந்த தடுப்பாட்ட வீரராக லோயர் ஆர்டரில் இருப்பார். எனவே பேட்டிங்கில் 6வது வீரராக அனுமாவிஹாரி மற்றும் ரிஷப் பண்ட் 7வது வீரராக களமிறங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ப்ளேயிங் 11 கணிப்பு:

ப்ளேயிங் 11 கணிப்பு:

சுப்மன் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Story first published: Tuesday, June 15, 2021, 19:38 [IST]
Other articles published on Jun 15, 2021
English summary
Sanjay Manjrekar has picked only Ravi Ashwin as India's spin bowling option in WTC Final playing XI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X