For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் பிரம்மாஸ்திரம்.. கடைசி நாளுக்காக அன்றே போட்ட மெகா ப்ளான்.. திணறப்போகிறதா நியூஸி,- விவரம்

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளான இன்று இந்தியாவின் திட்டம் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சூடுபிடித்துள்ளது.

VIDEO: 'யோவ்.. இந்தாய்யா..! கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த 'அல்டிமேட்’ ரியாக்‌ஷன்.. 'செம’ வைரல்!VIDEO: 'யோவ்.. இந்தாய்யா..! கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த 'அல்டிமேட்’ ரியாக்‌ஷன்.. 'செம’ வைரல்!

யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 திட்டத்திற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவுள்ளது.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையின் காரணமாக 2 நாட்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டாலும், பிட்ச்-ன் தன்மையால் இன்னிங்ஸ்கள் வெகு விரைவாக முடிவடைந்து வருகிறது. இங்கிலாந்து பிட்ச் வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதில் தற்போது நல்ல மழை பெய்து பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகம் உள்ளதால் நல்ல ஸ்விங் கிடைத்து வருகிறது. இதனால் விக்கெட்கள் மலமலவென என வீழ்ந்து வருகின்றன.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

மழைப்பொழிவு மற்றும் பிட்ச்-ன் தன்மைக்கு ஏற்றவாறு நியூசிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. ஆனால் இந்திய அணி பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால் இந்திய அணி கடைசி நாளை மனதில் வைத்துதான் ஸ்பின்னர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வானிலை மாற்றம்

வானிலை மாற்றம்

சவுத்தாம்டனில் கடந்த 5 நாட்களும் மழைப்பொழிவுகளும், போதிய வெளிச்சமின்மையும் இருந்து வந்த நிலையில் ரிசர்வ் டே எனப்படும் கடைசி நாளான இன்று நல்ல வெயில் அடிக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு இடைவெளிக்கு பிறகு உச்சி வெயில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஸ்பின்னர்களுக்கு நல்ல விருந்து காத்துள்ளது. நல்ல வெயில் அடித்து பிட்ச் வறண்டு போனால், பந்தில் நல்ல டேர்னிங் கிடைக்கும். பிட்ச் ஈரப்பதமாக இருந்த போதே அஸ்வின் மற்றும் ஜடேஜா விக்கெட்களை எடுத்து கடும் சவால் கொடுத்தனர். இதில் தற்போது ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறினால் ஜாக்பாட் என்றே கூறலாம்.

வாய்ப்பு

வாய்ப்பு

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 32 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் மதிய நேரத்திற்குள் இந்திய அணி வேகமாக ரன்களை குவித்து டிக்ளர் செய்துவிட்டால், 2வது இன்னிங்ஸில் இலக்கை அடைய நியூசிலாந்து வீரர்கள் பிரஷருக்கு தள்ளப்படுவார்கள். அப்போது இந்திய ஸ்பின்னர்கள் சுலபமாக விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, June 23, 2021, 21:58 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
Sudden weather Change in the 6th day of WTC Final Match, Spinner have a chances to ger more wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X