For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவுத்தாம்டனில் காத்திருக்கும் அச்சுறுத்தல்.. தடுமாறும் இந்திய அணி.. கேப்டன் கோலி போராட்டம்!

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, சிறப்பாக பந்துவீசி வருகிறது.

இந்திய அணியின் தொடக்கம்

இந்திய அணியின் தொடக்கம்

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் களமிறங்குகின்றனர். எனினும் எந்தவித தயக்கமும் இன்றி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளித்து முதல் விக்கெட்டிற்கு இவர்கள் 62 ரன்களை சேர்த்தனர்.

3 விக்கெட்கள்

3 விக்கெட்கள்

சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 34 ரன்களுக்கு கெயில் ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே சுப்மன் கில் 28 ரன்களுக்கு வாக்னரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் களமிறங்கிய புஜாரா - விராட் கோலி ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்ரெண்ட் போல்ட் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அவர் வீசிய இன் ஸ்விங்கில் நட்சத்திர வீரர் புஜாரா 8 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார். 62 ரன்களுக்கு முதல் விக்கெட் விழுந்த நிலையில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்கள் சரிந்தது.

 கோலி - ரஹானே

கோலி - ரஹானே

இதன் பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரஹானே நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி தற்போது 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்துள்ளது. வழக்கமாக பேட்டிங் களமிறங்கிய சில மணி நேரங்களில் அதிரடியை தொடங்கும் விராட் கோலி, பிட்ச்-ன் தன்மையை உணர்ந்து மிக நிதானமாக விளையாடி வருகிறார். இதுவரை 74 பந்துகளை சந்தித்துள்ள அவர், 27 ரன்களை சேர்த்துள்ளார்.

காத்திருக்கும் சிக்கல்

காத்திருக்கும் சிக்கல்

போட்டியின் தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது பிட்ச்-ல் நல்ல ஸ்விங் இருப்பதால் பந்தை கணிப்பதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று திணறி வருகின்றனர். எனினும் இங்கிலாந்து நேரப்படி இன்று மதியத்திற்கு மேல் சிறிது மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் பெரிய சிக்கல்கள் உள்ளது என்று கூறலாம்.

Story first published: Saturday, June 19, 2021, 19:33 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Team India Crossed 100 runs with the loss of 3 wickets in WTC Final against Newzealand. Captain Kohli trying to Increase runs on board
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X