For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியம்.. திடீரென கையில் கருப்பு பேண்ட் அணிந்த வீரர்கள்.. காரணம் என்ன?

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது திடீரென இந்திய வீரர்கள் கையில் கருப்பு பேண்ட்-ஐ அணிந்து விளையாடினர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

WTC Final: ஒரு முடிவோடு கமெண்ட்ரி.. தினேஷ் கார்த்திக் சேட்டைகள்.. இந்திய அளவில் டிரெண்டிங்WTC Final: ஒரு முடிவோடு கமெண்ட்ரி.. தினேஷ் கார்த்திக் சேட்டைகள்.. இந்திய அளவில் டிரெண்டிங்

நேற்று தொடங்குவதாக இருந்த சூழலில் தொடர் பெய்த மழையின் காரணமாக இன்று தான் தொடங்கியது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் தொடங்கியது. நேற்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதனையடுத்து தேசிய கீதத்திற்காக இந்திய அணி வீரர்கள் அணி வகுத்து நின்றபோது ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்கள், இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தங்களது கைகளில் கருப்பு பேண்ட்-களை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய வீரர்கள் மரியாதை

இந்திய வீரர்கள் மரியாதை

91 வயதாகும் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் அவரின் மனைவி நிர்மலா கவுரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்து வருகின்றனர். உணவு இடைவெளி வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்துள்ளது.

Story first published: Saturday, June 19, 2021, 20:20 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Team India players wearing black armbands in match against Newzealand, Milkha singh's Dead is the Reason behind it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X