For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3ம் நாள் போட்டிக்கும் ஆப்பா?.. தொடக்கத்திலேயே வந்த சிக்கல்.. அதிகாரிகள் கூறுவது என்ன?

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் தொடக்கமே சிக்கலை சந்தித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையினால் நின்ற நிலையில் 2ம் நாள் ஆட்டம் 64 ஓவர்கள் வரை நடைபெற்றது.

கெத்து காட்டிய இந்திய மகளிர் அணி.. விழிப்பிதுங்கிய இங்கிலாந்து பவுலர்கள்.. சமனில் முடிந்த டெஸ்ட்! கெத்து காட்டிய இந்திய மகளிர் அணி.. விழிப்பிதுங்கிய இங்கிலாந்து பவுலர்கள்.. சமனில் முடிந்த டெஸ்ட்!

 சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்களை சேர்த்தனர். பின்னர் வந்த புஜாரா 8 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இருவரும் சேர்ந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

மோசமான வானிலை

மோசமான வானிலை

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2ம் நாள் ஆட்டம் திடீரென வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. காலை முதல் சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ஆட்டம் உணவு இடைவெளிக்கு பின்னர் 3 முறை போட்டி தடைபட்டு இறுதியில் 2ம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் தொடக்கத்திலேயே சிக்கலை சந்தித்துள்ளது.

3வது நாள்

3வது நாள்

இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிட்ச்-ல் ஈரப்பதம் நிறைந்து காணப்படுவதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தாமதமாகியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் பிட்ச்-ல் ஆய்வு நடத்தி முடிவை தெரிவித்த பின்னர் 3ம் நாள் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்றைய வானிலை

இன்றைய வானிலை

இன்றைய வானிலையை பொறுத்தவரை இங்கிலாந்து நேரப்படி காலையில் வானிலை ஓரளவிற்கு நன்றாக இருக்கும் என்றும், மதியத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டமும் பாதித்தால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 20, 2021, 21:50 [IST]
Other articles published on Jun 20, 2021
English summary
ICC Announced the start of day three match of WTC Final has been delayed due to a wet outfield.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X