For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி vs வில்லியம்சன்.. யார் சிறந்தவர்? ஆச்சரியமளிக்கும் புள்ளி விவரம்.. ரசிகர்களுக்கு விருந்து ரெடி!

சவுத்தாம்டன்: கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதில் இரு அணிகளின் கேப்டன்கள் மீதும் அவர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

அஸ்வின் விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த மஞ்ச்ரேக்கர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுவாரஸ்ய முடிவு! அஸ்வின் விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த மஞ்ச்ரேக்கர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுவாரஸ்ய முடிவு!

கேப்டன்சி புள்ளிவிவரம்

கேப்டன்சி புள்ளிவிவரம்

இந்திய டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் (60) விராட் கோலி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 36 வெற்றிகளும், 14 தோல்விகளும் பெற்றுள்ளது. 10 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது. இதே போல நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் 36 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் அந்த அணி 21 வெற்றிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 7 போட்டிகள் சமனடைந்துள்ளன.

பேட்டிங் புள்ளிவிவரம்

பேட்டிங் புள்ளிவிவரம்

இந்திய அணி கேப்டனாக விராட் கோலி விளையாடியுள்ள 60 டெஸ்ட் போட்டிகளில், இதுவரை 5,392 ரன்களை விளாசியுள்ளார். இதில் 20 சதங்களும் அடங்கும். கோலியின் அதிகபட்ச ஸ்கோர் கடந்த 2019ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த 254 நாட் அவுட்டாகும். கோலியின் பேட்டிங் சராசரி 58.60 ரன்கள் ஆகும். இதே போல நியூஸி, கேப்டனாக வில்லியம்சன் இதுவரை 36 போட்டிகளி 3,092 ரன்களை அடித்துள்ளார். இதில் 11 சதங்களும் அடங்கும். வில்லியம்சனின் சராசரி 60.62 ரன்களாக உள்ளது. இதுமட்டுமல்லாம, வில்லியம்சன் தனது சிறந்த ஸ்கோரான 251 ரன்களை கேப்டனாக இருந்த போதுதான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிவிவரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிவிவரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி 14 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 10 வெற்றிகளும், 4 தோல்விகளையும் இந்தியா பெற்றுள்ளது. இதில் 2 தோல்விகள் நியூசிலாந்து மண்ணில் சந்தித்ததாகும். இதே போல கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 6 போட்டிகளில் வெற்றி மற்றும் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்டிங்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்டிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட 14 போட்டிகளில் 877 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்களும் அடங்கும். அவரின் சராசரி 43.85 ரன்களாகும். இதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக வில்லியம்சன் 9 போட்டிகளில் 817 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 சதங்களும் அடங்கும். அவரின் சராசரி 58.35 ரன்கள் ஆகும்.

போட்டி

போட்டி

வில்லியம்சன் - விராட் கோலி இருவருமே கேப்டன்சிப் மற்றும் பேட்டிங்கில் சம பலம் வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கணக்கில் எடுத்துக்கொண்டால் வில்லியம்சன் சற்று பலமாக உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள் கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, June 15, 2021, 19:36 [IST]
Other articles published on Jun 15, 2021
English summary
WTC final: Complete detail of Captains Virat Kohli and Kane Williamson Test captaincy records and stats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X