மூன்றே விஷயங்கள் போதும்.. மொத்த அணியையும் முடித்துவிடலாம்.. இந்திய பவுலர்களுக்கு லக்‌ஷ்மண் ஐடியா!

சவுத்தாம்டன்: நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணிக்கு 3 முக்கிய ஐடியாக்களை விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

துபாயில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ஐசிசி மீது பீட்டர்சன் கடும் அதிருப்தி.. வரவேற்பு தரும் ரசிகர்கள்! துபாயில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ஐசிசி மீது பீட்டர்சன் கடும் அதிருப்தி.. வரவேற்பு தரும் ரசிகர்கள்!

இந்த போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளதால் பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 3ம் நாள் முடிவு வரை 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவிருந்த சூழலில் விடாது கொட்டிய மழையினால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஏற்கனவே 2 நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கபட்டதால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் கொடுக்கப்படவுள்ளது. ஆனால் நியூசிலாந்து அணி 101 ரன்களை அடித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி 5ம் நாள் ஆட்டத்தில் வெகு சீக்கிரமாக விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனால் இன்றைய தினம் பந்துவீச்சாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

விவிஎஸ் லக்‌ஷ்மண்

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 5ம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் 3 விஷயங்களை செய்ய வேண்டும். முதலாவதாக பவுலர்களின் லெந்தில் மாற்றம் வேண்டும். தற்போது வரை இந்திய வீரர்கள் ‘குட் லெந்த்' பகுதியில் அதிகமாக வீசி வருகின்றனர். ஆனால் அவர்கள் இனி ‘ஃபுல் லெந்தில்' வீச வேண்டும். அப்போது தான் விக்கெட் எடுக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

நிதானம்

நிதானம்

2வது விஷயமாக இந்திய வீரர்கள் நிதானத்தை கடைபிடித்து ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ரன்களை அதிகளவில் கொடுத்துவிட்டால், இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமாகி விடும். எனவே முடிந்தவரை நியூசிலாந்து அணியின் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். 3வது விஷயமாக நியூசிலாந்து வீரர்களை ஆக்ரோஷ பட வைக்க வேண்டும். அந்த அணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிகளவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச வேண்டும். அப்போது அவர்கள் அடித்து ஆட நினைத்து அவுட்டாவார்கள். குறிப்பாக ராஸ் டெய்லர், கிராண்ட் ஹோம் ஆகியோருக்கு வீசலாம் எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
VVS Laxman Suggests 3 things India should do to bowl in WTC Final against New Zealand on Day 5
Story first published: Tuesday, June 22, 2021, 17:00 [IST]
Other articles published on Jun 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X