For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... இந்தியாவை முந்த நியூசிலாந்து... வெற்றி கட்டாயத்தில் இந்தியா!

துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 360 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

முதலிடத்தில் 360 புள்ளிகளுடன் இருந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தனது இடத்தை விட்டுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது இடத்தை தட்டிப் பறிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அணி உள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தியா

இரண்டாவது இடத்தில் இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது முதலிடத்தை ஆஸ்திரேலியாவிற்கு விட்டு கொடுத்துள்ளது. கொரோனா காரணமாக ஐசிசியால் மாற்றியமைக்கப்பட்ட புள்ளிகள் காரணமாக இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து

அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து

ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 360 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் அணிகள் உள்ளன. வங்கதேசம் 0 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் இரு அணிகளுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டி20 தொடரை கைகொண்டுள்ள நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அதன் புள்ளிகள் அதிகரித்துள்ளது.

கைப்பற்ற துடிக்கும் நியூசிலாந்து

கைப்பற்ற துடிக்கும் நியூசிலாந்து

இந்நிலையில், அடுத்ததாக ஆடவுள்ள போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் இரண்டாவது இடத்தை நியூசிலாந்து கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடர் அந்த அணிக்கு சாதகமாக காணப்படுகிறது.

வெற்றி பெறும் கட்டாயத்தில் இந்தியா

வெற்றி பெறும் கட்டாயத்தில் இந்தியா

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஆடிய ஒருநாள் தொடரை அந்த அணியிடம் இழந்துள்ளது. தற்போது டி20 தொடரில் விளையாடிவரும் இந்தியா அடுத்ததாக டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. இந்த தொடரில் வெற்றிக்கான தீவிரத்துடன் விளையாடும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும். மேலும் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றியை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, December 6, 2020, 10:56 [IST]
Other articles published on Dec 6, 2020
English summary
Need to win against England at home and don't lose against as too bad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X