For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்

பெங்களூரு : ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஜெய்ஷ்வால் சாதனை படைத்து ஜாம்வான்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் மும்பை அணி பேட் செய்தது.

இதில் கேப்டன் பிரித்வி ஷா டக் அவுட் ஆக, மும்பை அணி தடுமாறியது,. எனினும் முதல் இன்னிங்சில் ஜெய்ஷ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3 வீரர்களால் இந்தியாவுக்கு கண்டம்.. உம்ரான் மாலிக்கிற்கு துரோகம் செய்த டிராவிட்..ரசிகர்கள் அதிருப்தி3 வீரர்களால் இந்தியாவுக்கு கண்டம்.. உம்ரான் மாலிக்கிற்கு துரோகம் செய்த டிராவிட்..ரசிகர்கள் அதிருப்தி

முதல் இன்னிங்ஸ் சதம்

முதல் இன்னிங்ஸ் சதம்

சர்பிராஸ் கான் 40 ரன்கள் எடுக்க, ஜெய்ஷ்வால் சதம் விளாநினார். பின்னர் ஹர்திக் தாமூர் 113 ரன்கள் எடுக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் உத்தரப்பிரதேச அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடிக்கவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை எடுக்க, அந்த அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு சுருண்டது.

டிரா செய்தாலே வெற்றி

டிரா செய்தாலே வெற்றி

133 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 3வது நாள் ஆட்டத்தில் மும்பை அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால், மும்பை அணி இறுதிப் போட்டிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. இதனால் இந்தப் போட்டியை டிரா செய்தாலே மும்பை அணிக்கு போதுமானதாகும்.

ஜெய்ஷ்வால் சாகசம்

ஜெய்ஷ்வால் சாகசம்

இதனால், ஜெய்ஷ்வால் நங்கூரம் போட்டு ஆடுகளத்தில் மலை போல் நின்று பேட்டிங் செய்தார். ஜெய்ஷ்வால் தாம் எதிர்கொண்ட 54வது பந்தில் தான் முதல ரன்னை எடுத்தார். இந்த நிலையில், 4வது நாள் ஆட்டத்தை மும்பை அணி 133 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடர்ந்தது. ஜெய்வால் 35 ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். சிறப்பாக விளையாடிய அவர் உபி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை கொடுத்தார்.

சாதனை பட்டியலில் ஜெய்ஷ்வால்

சாதனை பட்டியலில் ஜெய்ஷ்வால்

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் 2வது இன்னிங்சில் 181 ரன்கள் விளாசினார். இது உபி அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அதிகமாகும். இதன் மூலம் முமபை அணிக்காக இரண்ட இன்னிங்சிலும் சதம் விளாசிய 9வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு சச்சின், ரோகித் சர்மா, வினோத் காம்பிளி, வாசிம் ஜாபர் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர். தற்போது மும்பை அணி 662 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Friday, June 17, 2022, 19:43 [IST]
Other articles published on Jun 17, 2022
English summary
Yashasvi jaiswal created history and joined in elite list ரஞ்சி கோப்பையில் ஜெய்ஷவால் சாதனை.. சச்சின், ரோகித் வரிசையில் இடம்பிடித்தார்.. மும்பை அபாரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X