For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கெல்லாம் போயி இப்படி கேள்வி கேட்கிறீங்க…? ‘அந்த’ விஷயத்தால் நொந்த கேப்டன்

லார்ட்ஸ்: நான் கொட்டாவி விட்டது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன் மூலம் 6 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்துவரும் 3 போட்டிகளை வெல்ல காத்திருக்கிறது. ஆனால், தென் ஆப்ரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்டியிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்டது கேமிராவில் தெரிந்தது. அந்த போட்டியில் இந்திய அணியிடம் தோற்ற பின் அந்த கொட்டாவி விடும் காட்சி இணையத்தில் பிரபலமானது. நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து, விமர்சனத்தையும் முன் வைத்தனர்.

ஒருவேளை இப்படி நடந்தா..! செமி பைனலில் பாக். இலங்கை, வங்கதேசம்.. தலையை சுத்த வைக்கும் கணக்கீடு ஒருவேளை இப்படி நடந்தா..! செமி பைனலில் பாக். இலங்கை, வங்கதேசம்.. தலையை சுத்த வைக்கும் கணக்கீடு

பாக். வீரர்கள் ஆவேசம்

பாக். வீரர்கள் ஆவேசம்

அந்த தோல்வியும், அவரது கொட்டாவியும் அகில உலக பேமசானது. இனி வரும் போட்டிகளில் ஜெயிக்காமல் போனால் செருப்படி என்று பாக். வீரர்களே பேசும் நிலை உருவானது. இந் நிலையில் பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அது குற்றமா?

அது குற்றமா?

அப்போது அவர் கூறியதாவது: கொட்டாவி வருவது இயல்பான ஒன்று. அதைத் தான் நான் செய்தேன். நான் இப்போது கொட்டாவிவிட்டது குற்றமா? ஏன் அப்படி எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

பணம் சம்பாதித்தனர்

பணம் சம்பாதித்தனர்

கொட்டாவி விட்டதை தவிர எந்த பாவமும் செய்யவில்லை. என்னுடைய கொட்டாவி மூலம் சிலர் பணம் சம்பாத்தித்தால், நல்ல விஷயம்தான். என்னுடைய கொட்டாவி சிலருக்கு பணம் சம்பாதிக்க பயன்படுகிறது.

திருப்புமுனை பேட்டிங்

திருப்புமுனை பேட்டிங்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரிஸ் சோகைலின் ஆட்டம் ரொம்ப சிறப்பு. அணியில் சில மாற்றங்கள் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. சோகைல் கடைசி 15 ஓவர்களில் பேட்டிங் செய்த விதம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.

பீல்டிங் முன்னேற்றம்

பீல்டிங் முன்னேற்றம்

பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். அதனை மேம்படுத்த பயிற்சிகள் எடுத்து வருகிறோம். ஏராளமான கேட்சுகளையும் கோட்டைவிட்டோம். அதை திருத்த வேண்டும். அடுத்து வரும் 3 போட்டிகளும் மிகவும் முக்கி்யமானது என்றார்.

Story first published: Monday, June 24, 2019, 17:16 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Yawning is a normal one says Pakistan captain safaraz ahmed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X