For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆமா, என் அக்கா ஒழுங்கீனமானவர்தான்... ஜுவாலா கட்டாவின் தங்கச்சி தடாலடி

ஹைதராபாத்: எனது அக்கா ஜுவாலா கட்டா ஒழுக்கமே இல்லாதவர் என்று கூறி அவரது தங்கை இன்சி குப்தா இந்திய விளையாட்டு ஆணையக இயக்குநர் ஜெனரல் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸுக்குக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆனால் இந்தக் கடிதத்தில் தனது அக்கா இந்திய பேட்மிண்ட்ன் துறைக்கு ஆற்றிய சேவைகளையும், படைத்த சாதனைகளையும் கொண்டு வந்த பெருமைகளையும் பட்டியலிட்டுள்ளார் இன்சி குப்தா.

மேலும் இப்படிப்பட்ட ஜுவாலா கட்டாவை இந்திய விளையாட்டு ஆணையகம் பாரபட்சமாக நடத்துவது குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். அந்தக் கடிதத்தின் சாராம்சம்...

காலையிலேயே காணாமல் போகும் அக்கா

காலையிலேயே காணாமல் போகும் அக்கா

எனது சிறு வயதில் அதிகாலையில் நான் எழுந்து பார்க்கும்போது எனது அக்காவும், அப்பாவும் அப்போதே காணாமல் போயிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன்பே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியிருப்பார்கள். பயிற்சிக்காக காலையிலேயே போய் விடுவார்கள். நாள் முடிவில்தான் இருவரும் திரும்பி வருவார்கள். எனது அக்கா இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்கப் போய் விடுவார்.

தினசரி 80 கிலோமீட்டர் பயணம்

தினசரி 80 கிலோமீட்டர் பயணம்

தினசரி 80 கிலோமீட்டர் அவர் பயணம் செய்து பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் மிகவும் சோர்வாக இருப்பார். எனவே பேசக் கூட நேரம் இருக்காது. எப்போதும் எனது பெற்றோர் அக்காவுக்காக உடன் இருப்பார்கள். அக்காவின் பேச்சு, மூச்சு, சாப்பாடு எல்லாமே பேட்மிண்டனாக மட்டுமே இருந்தது.

பெருமை கொண்ட பெற்றோர்

பெருமை கொண்ட பெற்றோர்

1996ம் ஆண்டு எனது அக்கா தேசிய சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றபோது எனது பெற்றோர் அடைந்த பெருமைக்கு அளவே இல்லை. அதுதான் மகிழ்ச்சியான தினமாக அமைந்தது. அப்போதுதான் பேட்மிண்டனுக்கும், எனது குடும்பத்துக்குமான நெருக்கத்தை நான் முதல் முறையாக உணர்ந்தேன்.

நம்பிக்கை இழக்க்காதவர்

நம்பிக்கை இழக்க்காதவர்

எனது அக்காவை நான் சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். அவர் பார்க்காத வெற்றி தோல்வி இல்லை. ஆனால் எப்போதும் நம்பிக்கையை இழக்காதவர். ஒவ்வொரு நாளும் புது நம்பிக்கையுடன் எழுவார். தனது கடமையை சரியாக செய்வார். ஒரு நாள் கூட பயிற்சியை அவர் மிஸ் செய்ததே இல்லை.

அது ஒழுங்கீனம் என்றால் உண்மைதான்

அது ஒழுங்கீனம் என்றால் உண்மைதான்

முறையாக, சரியாக, தவறாமல் அவர் பயிற்சிக்கு சென்றது ஒழுங்கீனம் என்றால் அது உண்மைதான். அந்த வகையில் அவர் ஒழுங்கீனமானவர்தான்.

தனக்கான கோச்சைத் தேர்வு செய்தது ஒழுங்கீனம் என்றால்

தனக்கான கோச்சைத் தேர்வு செய்தது ஒழுங்கீனம் என்றால்

தனது விளையாட்டுக்கும், பேட்மிண்டன் பயிற்சிக்கும் பொருத்தமான பயிற்சியாளரை தேர்வு செய்ய அவர் விரும்பினார். அது ஒழுங்கீனம் என்றால் எனது அக்கா ஒழுங்கீனமானவர்தான்.

எத்தனை எத்தனை சாதனைகள்

எத்தனை எத்தனை சாதனைகள்

எனது அக்கா செய்த சாதனைகள் எத்தனை எத்தனை.. பட்டியல் உங்களுக்கே தெரியும். தனது வாழ்க்கையில் பேட்மிண்டனுக்காக பல தியாகங்களைச் செய்தவர் எனது அக்கா. எல்லாமே இந்தியாவுக்காக அவர் செய்த தியாகங்கள். சுயமரியாதையை இழக்காதவர். தனது உரிமைகளுக்காக அவர் போராடுவது ஒழுங்கீனம் என்றால் எனது அக்கா ஒழுங்கீனமானவர்தான்.

பெருமைப்படுகிறேன்

பெருமைப்படுகிறேன்

எனது அக்கா இந்த தேசத்துக்காக செய்த சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். அவரது தங்கையாக நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து அவர் நாட்டைப் பெருமைப்படுத்துவார், நாட்டுக்காக விளையாடுவார் என்று கூறியுள்ளார் இன்சி.

Story first published: Monday, July 13, 2015, 11:57 [IST]
Other articles published on Jul 13, 2015
English summary
Insi Gutta, Jwala Gutta’s younger sister rattled by the on-going controversy surrounding her sister has written an open letter to Sports Authority of India’s DG Injeti Srinivas.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X