For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுலரை பந்தால் அடி, வெளுத்த விக்கெட் கீப்பர்…! வினையாகி போன அந்த முயற்சி..! வைரல் வீடியோ

Recommended Video

பவுலரை பந்தால் அடி, வெளுத்த விக்கெட் கீப்பர்…! வினையாகி போன அந்த முயற்சி..! வைரல் வீடியோ

லண்டன்: போட்டி ஒன்றின் போது விக்கெட் கீப்பர் ஒருவர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்கிறேன் பேர்வழி என்று வீசிய த்ரோவில் பந்துவீச்சாளர் பின்பக்கத்தில் பதம் பார்த்துவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் ஏகத்துக்கும் ஹிட்டித்து இருக்கிறது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது போல பல்வேறு நாடுகளிலும் பல டி 20 தொடர்கள் சக்சஸ்புல்லாக நடைபெற்று வருகின்றன. அது போன்ற ஒரு தொடர் தான் t 20 பிளாஸ்ட் என்னும் கிரிக்கெட் தொடர்.

இங்கிலாந்தில் நடைபெறும் டி20 போட்டியில் தொடரில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இத்தகைய போட்டிகளில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் இடையே கடும்போட்டி, காரசாரமான வார்த்தை பிரயோகம் இருக்கும்.

ஸ்டார் வீராங்கனையை கண்ணீர் சிந்த வைத்த சர்ச்சை பயிற்சியாளர்..!! இப்ப அவரு நிலைமையை பாருங்க..?ஸ்டார் வீராங்கனையை கண்ணீர் சிந்த வைத்த சர்ச்சை பயிற்சியாளர்..!! இப்ப அவரு நிலைமையை பாருங்க..?

சுவாரசிய சம்பவம்

சுவாரசிய சம்பவம்

பல தருணங்களில் பலத்த போட்டியுடன், முட்டல், மோதல் சம்பவங்களும் அரங்கேறும். இது போன்ற சம்பவங்களை கடந்தும், சில சுவாரசியமான, நகைச்சுவையான விஷயங்களும் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் டி 20 பிளாஸ்ட் தொடரில் நடைபெற்றுள்ளது.

பந்தால் தாக்குகிறார்

பந்தால் தாக்குகிறார்

டுர்ஹாம் மற்றும் யார்க்ஷைர் இடையேயான டி20 ப்ளாஸ்ட் தொடரில் அரங்கேறி உள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டி20 ப்ளாஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் யார்க்ஷைர் விக்கெட் கீப்பர் ஜோனாதன் டாட்டசெல், தமது அணியின் சக வீரர் கேசவ் மஹாராஜை பந்தால் தாக்குகிறார்.

அலறிய வீரர்

எதிர்முனையில் ரன் அவுட்டுக்காக பந்தை வீச, அது மஹாராஜ் மேல் விழுந்தது. அவரது தொடையை பலமாகி தாக்கி வலியால் துடித்து அலறுகிறார். காயம் அடைந்த மஹாராஜ் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டுர்ஹாமுக்கு 147 ரன்களை என்ற இலக்கை யார்க்ஷைர் நிர்ணயித்தது. ஆனால் 132 ரன்களுக்கு டுர்ஹாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்ட நாயகனாக தேர்வு

ஆட்ட நாயகனாக தேர்வு

யார்க்ஷைர் கேப்டன் காட்மோர் 52 ரன்கள் குவித்து அசத்தினார். லீனிங் 39 ரன்கள் குவித்தார். அதிர்த்து ஆடிய டுர்ஹாம் அணியில் ஸ்டிஒ 49 ரன்களையும், ஷார்ட் 29 ரன்களையும் குவித்தனர். ஆனால் யார்க்ஷைரின் ஜாக் ஷட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 11 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story first published: Wednesday, August 28, 2019, 14:42 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
Yorkshire wicket keeper hits bowler in Vitality Blast.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X