For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி நடந்திருக்க கூடாது.. ஓய்வு பெற்ற யுவராஜ் சிங்கிடம் ரோஹித் சர்மா சொன்னது என்ன தெரியுமா?

லண்டன்: ஓய்வு முடிவை அறிவித்த யுவராஜ் சிங் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உருக்கமாக டிவிட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் (37வயது) ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 19 ஆண்டுகளில் இந்திய அணிக்காக சுமார் 400 போட்டிகளில் விளையாடி உள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 701 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் 40 டெஸ்ட் போட்களில் விளையாடி 1900 ரன்கள் குவித்துள்ளார்.

சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் ஜொலித்தார். இப்படி இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் நேற்று மும்பையில் செய்தியாளர்கள் மத்தியில் தனது ஓய்வு முடிவை கண்ணீர் மல்க அறிவித்தார்.

 வாய்ப்பு வழங்காத பிசிசிஐ

வாய்ப்பு வழங்காத பிசிசிஐ

அப்போது பேசிய யுவராஜ் சிங், "கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இதில் 17 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன். இதுவே சரியான தருணம் என ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி இந்திய அணிக்காக 400 போட்டிகளில் விளையாடி உள்ளேன். யோ யோ சோதனையில் (விளையாட்டு வீரர்களுக்கான உடல் தகுதி சோதனை) தோல்வி அடைந்தாலும் எனக்கு வழியனுப்பு விழா போட்டியில் விளையாட அனுமதி அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்து இருந்தது, ஆனால் நான் ‘யோ-யோ' சோதனையில் வெற்றி பெற்றும் எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை" என்றார்.

சிறப்பாக வழி அனுப்பி இருக்கணும்

இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங்கை வெகுவாக புகழ்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஒரு விஷயத்தை இழக்கும் வரை அதன் அருமை தெரியாது. உங்களை மிகவும் நேசிக்கிறேன் சகோதரா. உங்களை இன்னும் சிறப்பாக வழி அனுப்பி இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

சாதனையாளனாக வரணும்

இதற்கு பதில் அளித்துள்ள யுவராஜ் சிங், நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். சகோதரா.. நீங்கள் சிறந்த லெஜெண்ட்டாக வரவேண்டும் என விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.

 அருகில் இல்லையே

அருகில் இல்லையே

மிகச்சிறந்த வீரரான யுவராஜ் சிங்கை வழி அனுப்பும் போட்டி வைக்கமால் ஒய்வு பெற வைத்தது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. எப்படி ஓய்வு பெற்று இருக்க வேண்டியவர், இப்படி நாங்கள் யாருமே பக்கத்தில் இல்லாத தருணத்தில் ஓய்வு பெற்றுவிட்டாரே என வருத்தப்பட்டனர்.

Story first published: Tuesday, June 11, 2019, 15:26 [IST]
Other articles published on Jun 11, 2019
English summary
"You Deserved A Better Send-Off", Says Rohit Sharma, Yuvraj Singh reply that Love u brotharman you go be a legend
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X