For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியிடமிருந்து கேப்டன்ஷிப்பை பறித்தால் இந்திய அணிக்கு ஆபத்து.. கேரி கிறிஸ்டன் வார்னிங்

டோணியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அது அணிக்கு மிகப்பெரிய ஆபத்து என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்தார்.

By Veera Kumar

மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியை டோணியிடமிருந்து பிடுங்கி விராட் கோஹ்லியிடம் தருவது மிகப்பெரிய ரிஸ்க் என்று, அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான கேரி கிறிஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த கோச் என்று புகழப்படுபவர் கேரி கிறிஸ்டன். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக உருவெடுக்க தொடங்கியது.

2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதுமட்டுமில்லாமல், டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.

சிறந்த கேப்டன் டோணி

சிறந்த கேப்டன் டோணி

மும்பைக்கு வந்துள்ள கேரி கிறிஸ்டனிடம், டோணி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, கேப்டன் பொறுப்பை கோஹ்லியிடம் வழங்கலாம் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்வி நிருபர்களால் முன் வைக்கப்பட்டது. இதைக்கேட்ட கிறிஸ்டன் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். நான் பணியாற்றியதிலேயே சிறந்த கேப்டன் டோணிதான் என கிறிஸ்டன் உடனடியாக பதில் வழங்கினார்.

சந்தேகம் வேண்டாமே

சந்தேகம் வேண்டாமே

கடந்த 9-10 வருடங்களில் டோணி தலைமையில் பெற்ற சாதனைகள் அவரது மகத்துவத்தை பேசும். டோணி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்பதில் எந்த வாதமும் தேவையில்லை. அவரது சாதனைகளை யாராவது சந்தேகப்பட்டால் அது மிகப்பெரிய தவறான செயல் என்பேன்.

ஐயய்யோ, ஆபத்து

ஐயய்யோ, ஆபத்து

டோணியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அது அணிக்கு மிகப்பெரிய ஆபத்து. அனைத்து சிறந்த வீரர்களுக்குள்ளும் மிகச்சிறந்த திறமை இருக்கும். இன்னுமொரு சிறந்த உலக கோப்பை பங்களிப்பு அவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதை யார் கண்டது? ஒரு காலகட்டத்தில் சிறந்த வீரர்களாகவே இருந்தாலும் ஓய்வு பெறத்தான் வேண்டும். ஆனால், அந்த முடிவை சம்மந்தப்பட்ட வீரரே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கும்ப்ளே அருமை

கும்ப்ளே அருமை

அனில்கும்ப்ளே தற்போது இந்திய பயிற்சியாளராக உள்ளார். அவரிடம் அதிகமாக நான் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் இந்திய அணியினர் அவரிடம் இயல்பான மரியாதை வைத்துள்ளதை பார்த்துள்ளேன். ஒரு இந்திய வீரர், இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது நல்லதுதான். அனில் கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற உடனேயே அதற்கான நல்ல பலன்களை இந்திய அணியும் பெறத் தொடங்கியுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கும்ப்ளேயின் வழிகாட்டுதல்கள் பலன் அளிக்கும்.

டிஆர்எஸ் வர வேண்டும்

டிஆர்எஸ் வர வேண்டும்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையை கையிலெடுக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது மகிழ்ச்சிக்குறியது. டிஆர்எஸ் நடைமுறை என்பது நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டுதான் உள்ளது. எனவே டெஸ்ட் போட்டிகளுக்கு அந்த நடைமுறை நல்ல பலனை தரும். இவ்வாறு கேரி கிறிஸ்டன் தெரிவித்தார்.

Story first published: Wednesday, November 2, 2016, 11:04 [IST]
Other articles published on Nov 2, 2016
English summary
Gary Kirsten dismissed any suggestion that it is time MS Dhoni stepped down as limited-overs captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X