ரிட்டயர்டு எல்லாம் இல்லை…!! மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..!!

மும்பை: அணியில் இடம்பெறும் விவகாரத்தில் தேர்வுக்குழுவை விசாரித்த அம்பத்தி ராயுடு விளையாடுவதற்கு மீண்டும் மட்டையை தூக்குகிறார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அணியின் 4ம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார்.

அணியில் தேர்வாவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த உலக கோப்பை தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக விரக்தி அடைந்த அடுத்து பண்ணிய காரியம் தான் உச்சக் கட்டம். உலக கோப்பை தொடருக்கு தன்னை தேர்வு செய்யாததால் வெளிப்படையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்தார். தேர்வான விஜய் சங்கரையும் 3 டி வீரர் என்று கிண்டலடித்தார்.

ஒரு கட்டத்தில் மனம் வெதும்பி ஓய்வு முடிவையும் அறிவித்தார். இதனை அடுத்து தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ராயுடு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்ற தனது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் நான் தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில் விளையாடுகிறேன். இந்த தொடர் வரும் 19ம் தேதி முதல் சென்னையில் துவங்குகிறது என்று அறிவித்து ள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் விளையாட உள்ளது சாத்தியமாகியுள்ளது. அதனை தொடர்ந்து மேலும் வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Young player ambati rayudu is back to play cricket.
Story first published: Friday, August 16, 2019, 13:50 [IST]
Other articles published on Aug 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X