For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூத்த வீரர்களுக்கு டாட்டா பை பை.. புது ரத்தம் பாய்ச்சப் போகும் இளம் இந்திய வீரர்கள் லிஸ்ட் ரெடி!

Recommended Video

Shreyas Iyer : தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி- வீடியோ

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற உள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் புத்துணர்வு அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட உள்ளனர்.

தோனி இல்லை

தோனி இல்லை

மூத்த வீரர் தோனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவத்துடன் செலவிட உள்ளதாக கூறி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே, தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார்.

தவான், விஜய் ஷங்கர் சந்தேகம்

தவான், விஜய் ஷங்கர் சந்தேகம்

உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த தவான், விஜய் ஷங்கர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்றே தெரிகிறது. இருவரும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்.

தினேஷ் கார்த்திக், ஜாதவ்

தினேஷ் கார்த்திக், ஜாதவ்

தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் இருவரும் உலகக்கோப்பை தொடரில் சொதப்பியதால், அவர்களுக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. குறிப்பாக, தினேஷ் கார்த்திக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லலாம்.

தோனிக்கு மாற்று இவர் தான்

தோனிக்கு மாற்று இவர் தான்

இப்படி மூத்த வீரர்கள் அணியில் இடம் பெறாத நிலையில் இளம் வீரர்கள் படை இந்திய அணியை நிரப்பப் போகிறது. தோனிக்கு மாற்றாகவும், இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இளம் பேட்டிங் படை

இளம் பேட்டிங் படை

அடுத்து பேட்டிங்கை பலப்படுத்த ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே மற்றும் ஷுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மூவரும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான போட்டியில் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.

இளம் பந்துவீச்சாளர்கள்

இளம் பந்துவீச்சாளர்கள்

அதே போல, வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இளம் வீரர்களான தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மது உள்ளனர். இவர்கள் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினர். இவர்களுக்கு சுழற்சி முறையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Saturday, July 20, 2019, 21:03 [IST]
Other articles published on Jul 20, 2019
English summary
These young players may get chance in Indian squad for West Indies tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X