For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..!

லண்டன்:உலக கோப்பையில் அதிக முறை பங்கேற்ற வீரர்கள், அதிக சாதனை புரிந்தவர்கள் என்ற பட்டியலை பார்த்தவங்களுக்கு இப்ப சொல்ற விஷயம் புதுசு. இந்த உலக கோப்பையில் உள்ள இளம் வீரர்களை பற்றி பார்க்க போறோம்.

உலக கோப்பை வரலாற்றில் ஒரு முறை சாம்பியனாகி இருக்கிறது இலங்கை. அர்ஜூன ரணதுங்கா கேப்டனாக இருந்த காலத்தில் இது நடந்தது. அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அரவிந்த் டி சில்வா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

அதுபோன்றே, இந்த முறையும் உலக கோப்பையை வெல்ல தயாராகி இருக்கிறது இலங்கை. அந்த அணியில் மிக இளம் வயது வீரராக களம் இறங்கி இருக்கிறார் அவிஸ்கா பெர்ணான்டோ.

நம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க..! உலக கோப்பை இந்தியாவுக்கே...! சொல்லும் அந்த பிரபலம் நம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க..! உலக கோப்பை இந்தியாவுக்கே...! சொல்லும் அந்த பிரபலம்

18 வயதில் அறிமுகம்

18 வயதில் அறிமுகம்

21 வயதே ஆன பெர்னாண்டோ, இலங்கை வீரர்களிலேயே மிக இளம் வயதில் 2019 உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் 18வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

ஒரு தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியின் மாற்று வீரராக இவர் செயல்பட உள்ளார். இருப்பினும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், இலங்கை அணி நிர்வாகம், 11 பேர் கொண்ட அணியில் அவரை களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு நாள் கம்மி

ஒரு நாள் கம்மி

அடுத்து சாஹின் அப்ரிடி.... உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிக இளம் வீரர். அணியில் உள்ள சக வீரரான முகமது ஹுசைனை விட ஒரு நாள் இளையவர். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களம் காண்பதற்கு முன்பு தான் இவர்கள் இருவரும் பிறந்தார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

அதகள பந்துவீச்சு

அதகள பந்துவீச்சு

சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வரும் அப்ரிடி 14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை சாய்த்திருக்கிறார். பந்துவீச்சில் எதிரணிகளை அதகளம் பண்ணி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் உலகின் முன்னிணி வீரர்கள் இவர் மீது ஒரு கண் வைத்துள்ளனர் எனலாம்.

கலக்கல் ரகுமான்

கலக்கல் ரகுமான்

ஆப்கானிஸ்தான் அணி , தங்களது கிரிக்கெட் வரலாற்றில் 2வது முறையாக உலக கோப்பையில் களம் காண்கிறது. அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் என்றால் முஜிப் ரகுமான். அவருக்கு வயது வெறும் 18 தான்.

56 விக். வீழ்த்தியவர்

56 விக். வீழ்த்தியவர்

உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களிலும் இடம்பெற்று தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் விளையாடியது 29 ஒருநாள் போட்டிகள்... ஆனால் கைப்பற்றியது 56 விக்கெட்டுகள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இங்கிலாந்து காலநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் ரகுமான், பந்து வீச்சால் எதிரணிகளை ஒரு வழி பண்ணுவார் என்று சொல்லலாம்.

Story first published: Wednesday, May 22, 2019, 19:27 [IST]
Other articles published on May 22, 2019
English summary
Youngest key players list in icc cricket world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X