For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

23 வருடத்திற்கு பின்.. 4 ரன்னில் இன்சமாம் தவறவிட்ட சாதனையை, தன்வசப்படுத்திய யூனிஸ்கான்!

By Veera Kumar

அபுதாபி: கடந்த 22 வருடங்களாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாவித் மியாண்டட் தன்வசம் வைத்திருந்த சாதனையை யூனிஸ்கான் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை தற்போது யூனிஸ்கான் பேட்டால் எழுதப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றார் பாகிஸ்தான் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஜாவித் மியாண்டட்.

23 வருடமாக சாதனை

23 வருடமாக சாதனை

ஓய்வுக்கு முன்பாக அவர், 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8 ஆயிரத்து 832 ரன்களை குவித்திருந்தார். பாகிஸ்தான் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் மியாண்டுடையது. அதன்பிறகு அந்த சாதனை கடந்த 23 வருடங்களாக தகர்க்க முடியாததாகவே தொடர்ந்தது.

ஜஸ்ட் மிஸ்சான இன்சி

ஜஸ்ட் மிஸ்சான இன்சி

பாகிஸ்தானின் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-ஹக், ஏறத்தாழ அந்த சாதனையை நெருங்கினார். 119 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இன்சமாம், 8 ஆயிரத்து 829 ரன்கள் குவித்திருந்தார். 4 ரன்கள் மட்டும் கூடுதலாக எடுத்திருந்தாலும், மியாண்டட் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும். 3 ரன் எடுத்திருந்தாலும், சாதனை சமன் ஆகியிருக்கும். ஆனால், அதற்கு முன்பாக அவர் ஓய்வு பெற்றார்.

யூனிஸ்கான் சாதனை

யூனிஸ்கான் சாதனை

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை ஆடிவருகிறது. முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்யும், பாகிஸ்தான் அணியின், வீரர் யூனிஸ்கான், மியாண்டட் சாதனையை முறியடித்தார்.

வாழ்த்து

வாழ்த்து

அந்த சாதனையை படைக்க 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நேற்று அவர் பேட் செய்ய களமிறங்கினார். அந்த ரன்களை அவர் கடந்தபோது, மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்தனர். 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில், கேப்டன் குக்கிடம் கேட்ச் கொடுத்து யூனிஸ் வீழ்ந்தார்.

பாகிஸ்தான் சாதனைகள்

பாகிஸ்தான் சாதனைகள்

23 வருட கால சாதனையை முறியடித்த யூனிஸ்கான், 102 டெஸ்டுகளில், 8852 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக மியாண்டட்டும், மூன்றாவதாக இன்சமாமும் உள்ள நிலையில், 90 டெஸ்டுகளில் 7530 ரன்கள் குவித்த முகமது யூசுப் 4வது இடத்திலும், சலீம் மாலிக் 5768 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

கடவுள் நம்பர்-1

கடவுள் நம்பர்-1

ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங், வெஸ்ட் இண்டீசில் பிரைன் லாரா, இங்கிலாந்தில் அலிஸ்டர் குக், இலங்கையில் சங்ககாரா, தென் ஆப்பிரிக்காவில் ஜாக் கல்லீஸ், நியூசிலாந்தில் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் அவரவர் நாட்டின் உச்சபட்ச டெஸ்ட் ரன் குவிப்பாளர்கள். 198 டெஸ்டில் 15,837 ரன்கள் குவித்த உலகின் முதல் வீரராக, சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து விளங்கிவருகிறார்.

Story first published: Wednesday, October 14, 2015, 10:05 [IST]
Other articles published on Oct 14, 2015
English summary
Younis Khan today broke Javed Miandad's long-standing record during the 1st day of the 1st Test against England here at Sheikh Zayed Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X