For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனி ஒருவனாக கவாஸ்கர் மட்டும்.. சிங்கம் போல சிங்கிளாக.. நம்பர் 1 யார் தெரியுமா?

மும்பை: வாங்க பழைய கிரிக்கெட் கொஞ்சம் பார்ப்போம். லாக்டவுன் போரடிக்காமல் இருக்க இப்படித்தான் அவ்வப்போது பழைய கிரிக்கெட்டைப் புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

Recommended Video

Players with more tons from 4th innings in test matches

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைப்பது மிகப் பெரிய விஷயம். எல்லோருக்கும் கிடைத்து விடாது. தொடர்ந்து நிலைத்து நின்று ஆடுபவர்களால்தான் சாதனைகளைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட வீரர்கள் சிலர்தான் உள்ளனர்.

அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்கப் போவது 4வது இன்னிங்ஸில் சதம் அடித்த சாதனையாளர்கள் குறித்த பார்வைதான்.

அண்ணன் அனில் கும்ப்ளே செய்த அந்த மறக்க முடியாத உதவி.. உருகிய பாக். வீரர்.. நெகிழ்ச்சி சம்பவம்!அண்ணன் அனில் கும்ப்ளே செய்த அந்த மறக்க முடியாத உதவி.. உருகிய பாக். வீரர்.. நெகிழ்ச்சி சம்பவம்!

4வது இன்னிங்ஸ் சதங்கள்

4வது இன்னிங்ஸ் சதங்கள்

முதல் இன்னிங்ஸில் சதம் அடிப்பது ரொம்ப ஈஸி. 2வது, 3வது இன்னிங்ஸும் கூட ஈஸிதான். ஆனால் 4வது இன்னிங்ஸில் சதம் என்பதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. அதற்கு தனி திறமை வேண்டும். அசாத்திய வேகம். பொறுமை மற்றும் சமயோஜிதம் தேவை. காரணம் மிகவும் குறுகிய காலமே இருக்கக் கூடிய இன்னிங்ஸ்தான் இந்த 4வது இன்னிங்ஸ்.

யூனிஸ்கான் முதலிடம்

யூனிஸ்கான் முதலிடம்

அப்படிப்பட்ட 4வது இன்னிங்ஸில் சதம் அடித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் யூனிஸ்கான்தான். நல்ல உயரமான வீரர்களில் இவருக்கு தனி இடம் உண்டு. அருமையான ஆட்டக்காரர். இவர் நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 5 சதம் அடித்துள்ளார். அதிக சதம் போட்டவர்களில் இவரே முதலிடத்திலும் இருக்கிறார். பாகிஸ்தானுக்குக் கிடைத்த அருமையான டெஸ்ட் வீரர்களில் யூனிஸ்கானும் ஒருவர். இவர் டெஸ்ட் போட்டிகளில் குவித்த மொத்த ரன்கள் 10,099 ஆகும்.

சுனில் கவாஸ்கருக்கு 2வது இடம்

சுனில் கவாஸ்கருக்கு 2வது இடம்

இந்த வரிசையில் 2வது இடத்தில் வருபவர் நம்முடைய வீரர் சுனில் கவாஸ்கர். மொத்தம் 4 சதங்களை 4வது இன்னிங்கில் விளாசியுள்ளார் கவாஸ்கர். கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ராஜாவாக கோலோச்சியவர் என்பது நினைவிருக்கலாம். நிலைத்து நின்று ஆடி ரன்களைக் குவிப்பதில் அவர் ஒரு மாஸ்டர்.

டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்

டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்

கவாஸ்கரைப் பொறுத்தவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர். முதன் முதலில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் அவர்தான். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சம் அடித்த சாதனையையும் முதலில் படைத்தவர் அவர்தான். அதன் பிறகுதான் சச்சின் டெண்டுல்கர் என பலரும் இந்த சாதனையை முறியடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை அடித்த சாதனையாளர் கவாஸ்கர். பின்னர் அதை சச்சின் முறியடித்தார்.

மேலும் 3 வீரர்கள் சாதனை

மேலும் 3 வீரர்கள் சாதனை

ராம்நரேஷ் சர்வான் இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார். இவரது பங்கும் 4 சதங்கள்தான். அதேபோல தென்னாப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங் ஆகியோரும் தலா 4 சதம் அடித்து 4வது இன்னிங்ஸில் சதமடித்த சாதனையாளர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளனர். இந்த வீரர்கள் எல்லோருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்தவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.

Story first published: Monday, April 13, 2020, 18:22 [IST]
Other articles published on Apr 13, 2020
English summary
Pakistan former player Younis Khan holds the record for scoring the most centuries in the 4th innings of test matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X