For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்!

லண்டன் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் தான் சந்தித்த வித்தியாசமான பாகிஸ்தான் வீரர்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறினார்.

Recommended Video

Younis Khan put knife to the thorat of Grant Flower

அப்போது பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன யூனிஸ் கான் பற்றிய அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்தார்.

10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்.. மனைவியும் தப்பினார்!10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்.. மனைவியும் தப்பினார்!

அதிர்ச்சி சம்பவங்கள்

அதிர்ச்சி சம்பவங்கள்

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தது பற்றி ஏற்கனவே பல அதிர்ச்சி சம்பவங்களை கூறி உள்ளார் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரான்ட் பிளவர். தற்போது பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஆன யூனிஸ் கான் பற்றி கூறி உள்ளார்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யூனிஸ் கான் தான். அவர் மட்டுமே பாகிஸ்தான் நாட்டிற்காக டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார். மிகவும் நிதான ஆட்டம் ஆடக் கூடியவர் யூனிஸ் கான். அவர் ஒரு முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடினார்.

டக் அவுட்

டக் அவுட்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்க்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் அவரிடம் இடைவேளையில் பேட்டிங் குறித்த அறிவுரை ஒன்றை கூறி உள்ளார்.

கத்தியை எடுத்து..

கத்தியை எடுத்து..

ஆனால், யூனிஸ் கான் அதை ஒரு அனுபவ வீரரின் கருத்தாக எடுத்துக் கொள்ளாமல், கோபத்தில் கத்தியை எடுத்துக் கொண்டு வந்து வந்து கிரான்ட் பிளவர் கழுத்தில் வைத்துள்ளார். அதைக் கண்டு அவர் மிரண்டு போனார். அப்போது அருகில் இருந்த தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சமாதானம் செய்துள்ளார்.

கேரியர்

கேரியர்

யூனிஸ் கான் கேரியருக்கு முன்னால், அவர் எடுத்த ரன்களுக்கு முன்னால் தன் கேரியர் அருகே கூட நிற்க முடியாது. பாகிஸ்தான் அணிக்காக அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர். ஆனால், தான் கூறிய அறிவுரையை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் கிரான்ட் பிளவர்.

கடினமானவர்

கடினமானவர்

இந்த சம்பவத்தை பகிர்ந்த கிரான்ட் பிளவர், யூனிஸ் கான் புரிந்து கொள்ள கடினமானவர் எனவும் கூறி உள்ளார். மற்றொரு வீரரான அஹ்மத் ஷாசாத்தும் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வீரர், வித்தியாசமான குணம் கொண்டவர் என கூறி உள்ளார்.

பயத்துடன் இருந்தேன்

பயத்துடன் இருந்தேன்

ஜிம்பாப்வே அணியின் சிறந்த வீரர்களுள் ஒருவரான கிரான்ட் பிளவர் பாகிஸ்தான் அணிக்கு 2014இல் இருந்து 2019 வரை பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் விடை பெற்ற பின் பாகிஸ்தான் நாட்டில் பயத்துடனே தான் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

முதுகில் குத்திய வீரர்கள்

முதுகில் குத்திய வீரர்கள்

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தன் முதகில் குத்தியதாகவும் கிரான்ட் பிளவர் அப்போது கூறி இருந்தார். யூனிஸ் கான் அதே பிரிஸ்பேன் டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸில் 65 ரன்கள் எடுத்தார். அந்த தொடரின் முடிவில் சிட்னியில் 175* ரன்கள் குவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 2, 2020, 19:14 [IST]
Other articles published on Jul 2, 2020
English summary
Pakistan batting legend Younis Khan put knife to the thorat of batting coach Grant Flower for giving him advice during Australia test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X