For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உண்மையை சொன்னா நம்மளை முட்டாப் பயல்னு சொல்றாங்க.. அதிர வைத்த முன்னாள் பாக். வீரர்!

கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தான் கேப்டனாக இருந்த போது உண்மையை பேசியதாகவும், அதற்காக தன்னை முட்டாள் என அனைவரும் கூறியதாகவும் கூறி இருக்கிறார்.

Recommended Video

Younis Khan reveals after he speak truth he was called madman.

இம்ரான் கானுக்கு பின் பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் யூனிஸ் கான்.

2009 டி20 உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் அவரது தலைமையில் தான் வென்றது.

என்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்!என்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்!

பதவி பறிக்கப்பட்டது

பதவி பறிக்கப்பட்டது

ஆனாலும், அடுத்த ஆறு மாதங்களில் அவர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், தான் உண்மையை பேசியது தான் என கூறி உள்ளார். சில வீரர்கள் சரியாக ஆடவில்லை என தான் கூறியதால் முட்டாள் என கூறப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார்.

உண்மை பேசினால் முட்டாள்

உண்மை பேசினால் முட்டாள்

வாழ்க்கையில் நீங்கள் உண்மை பேசினால் முட்டாள் என கூறப்படும் நிலை வரும். நான் சில வீரர்கள் சரியாக ஆடவில்லை எனக் கூறினேன். அது தான் நான் செய்த தவறு என என்ன நடந்தது என்பது பற்றி கூறினார் யூனிஸ் கான்.

எப்போதும் உண்மை பேச வேண்டும்

எப்போதும் உண்மை பேச வேண்டும்

அதே வீரர்கள் பின்னர் அதற்கு வருத்தம் அடைந்தனர். அவர்களுடன் நான் நீண்ட காலம் ஆடினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். எப்போதும் உண்மை பேச வேண்டும் என்பதை என் தந்தையிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு இருந்தேன் என்றார் அவர்.

டெஸ்ட் ஜாம்பவான்

டெஸ்ட் ஜாம்பவான்

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்பட்டவர் யூனிஸ் கான். 118 டெஸ்ட் போட்டிகளில் 10,009 ரன்கள் குவித்துள்ளார். 34 சதம், 33 அரைசதம் அடித்துள்ளார். அவரது சராசரி 52 ஆகும். அவர் 17 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக ஆடி உள்ளார்.

Story first published: Monday, May 25, 2020, 21:31 [IST]
Other articles published on May 25, 2020
English summary
Younis Khan reveals after he speak truth he was called madman. He was removed from captaincy when he speak about certain players form.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X