இவ்வளோ அசிங்கமாவா.. யூசஃப் பதான் - ஜான்சன் கடும் சண்டை.. லெஜெண்ட்ஸ் லீக்கில் பரபரப்பு சம்பவம்!.

ஜோத்பூர்: இந்திய முன்னாள் வீரர் யூசஃப் பதான் மற்றும் மிட்செல் ஜான்சன் ஆகியோர் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Mitchell Johnson-Yusuf Pathan மோதல்! LLC 2022-யில் பரபரப்பு | Aanee's Appeal

ஓய்வு பெற்ற வீரர்களின் ஆட்டத்தை மீண்டும் காணும் வகையில் கடந்தாண்டு லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.

இந்த தொடரின் 2வது சீசன் கடந்தாண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹா..ஹா.. வக்கார் யூனிஸ்க்கு செம நோஸ் கட்.. இர்பான் பதான் கொடுத்த தரமான பதிலடிஹா..ஹா.. வக்கார் யூனிஸ்க்கு செம நோஸ் கட்.. இர்பான் பதான் கொடுத்த தரமான பதிலடி

லெஜெண்ட்ஸ் லீக் தொடர்

லெஜெண்ட்ஸ் லீக் தொடர்

இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் குவாலிஃபையர் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பில்வாரா கிங்ஸ் மற்றும் இந்தியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பில்வாரா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சர்ச்சை

சர்ச்சை

இந்நிலையில் இப்போட்டியில் காரசார சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பில்வாரா கிங்ஸ் இன்னிங்ஸின் போது யூசஃப் பதான் 24 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் வீசிய 19வது ஓவரின் முதல் சில பந்துகளிலேயே 6,4,6 அடுத்தடுத்து விளாசினார். எனினும் ஜான்சன் 5வது பந்தில் யூசஃப் பதானின் விக்கெட்டை கைப்பற்றி பழிதீர்த்தார்.

கடுமையான சண்டை

கடுமையான சண்டை

விக்கெட்டை எடுத்தவுடன் யூசஃபை கோபமாக்கும் வகையில் ஜான்சன் *** ஆஃப் என அசிங்கமாக கூறினார். இதனால் அத்திரமடைந்த யூசஃப் பதான், ஜான்சனை நோக்கி கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டே சண்டைக்கு சென்றார். பதிலுக்கு ஜான்சனும் அவரை தள்ளிவிட, இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டுக்கொண்டனர்.

கைகலப்பு?

கைகலப்பு?

ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சென்றதும், கள நடுவர் குறுக்கிட்டு சமாதானப்படுத்தி வைத்தனர். எனினும் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்னாள் வீரர்களின் பழைய அதிரடியை காண வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அவர்களுடைய ஆக்ரோஷத்தையும் காண வேண்டியதாக மாறியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Yusuf Pathan and Mitchell Johnson involved in altercation during Legends League 2022
Story first published: Monday, October 3, 2022, 16:14 [IST]
Other articles published on Oct 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X