For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் மீண்டும் ஃபுல் ஃபார்மில் யுவி! 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்து சரவெடி!

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் யுவராஜ் சிங் மீண்டும் ஃபுல் ஃபார்மில் இறங்கியுள்ளார்.
 

By Kalai Mathi

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் ராயல் சேலன்ஞ்சர்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய யுவராஜ் சிங் 27 பந்துகளில் 62 ரன்களை குவித்து பட்டையை கிளப்பினார். அவரது அதிடி ஆட்டத்தால் ரன்களை குவித்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை எடுத்திருந்தது.

10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கின. முதல் நாளான நேற்று நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அந்த அணியின் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடி

ஆரம்பம் முதலே அதிரடி

சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதனால் ரன் ராக்கெட் வேகத்தில் குவிந்தது.போட்டியின் இரண்டாவது ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் 8 ரன்கள் எடுத்திருந்த போது சவுத்ரியின் பந்தில் மந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து 3வது வீரராக களமிறங்கிய ஹென்றிக்யூஸ், ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப் நிதானமாக ரன்களை சேர்த்தது.

வானவேடிக்கை காட்டிய யுவி

வானவேடிக்கை காட்டிய யுவி

தவான் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்தபோது பின்னியின் பந்துவீச்சில் சச்சின் பேபியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதைடுத்து நான்காவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் ரசிகர்களின் உற்சாக முழக்கத்துக்கு இடையே பேட்டிங்கை தொடங்கி பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டார்.

23 பந்துகளில் அரைச்சதத்தை கடந்த அவர், 27 பந்துகளில் 62 ரன்களை குவித்து வான வேடிக்கை காட்டினார்.

207 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்

207 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்

இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அதிகபட்சமாக யுவராஜ் சிங் 27 பந்துகளுக்கு 62 ரன்களும் ஹென்ரிக்யூஸ் 37 பந்துகளுக்கு 52 ரன்களும் எடுத்திருந்தனர். யுவியின் அதிரடியால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்திருந்தது.

முதல் வெற்றி..

முதல் வெற்றி..

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி தனது பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. 27 பந்துகளில் 62 ரன்களை குவித்த அதிரடி நாயகன் யுவராஜ் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Thursday, April 6, 2017, 9:31 [IST]
Other articles published on Apr 6, 2017
English summary
10th IPL: Yuvaraj was playing for Sun risers Hydrabad with a full energy. He deployed 62 runs in 27 balls. he became the player of the match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X