For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காந்தக் கண்ணழகி.. "புவனி"... கலாய்த்த ஹர்பஜன் சிங்.. ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!

மும்பை: ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா.. இது வடிவேலு வசனம் மட்டுமல்ல.. இந்த பேஸ் ஆப்பை வைத்து பலரும் ஆப்பு வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நம்ம யுவராஜ் சிங்.

ரோஹித் சர்மாவை பொம்பளையாக்கி சஹல் கலாய்த்தார். இப்போது ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் மேக்கப் போட்டு களம் இறக்கியிருக்கிறார் நம்ம யுவராஜ் சிங்.. இதில் யார் கூட உங்களுக்கு ஜோடி போட ஆசை என்று கேள்வி வேறு.

ரசிகர்கள் சும்மா இருப்பார்களா.. வந்து குவிந்து விட்டனர். அதுவும் ஹர்பஜன் சிங் போட்ட ஒரு கமெண்ட்டைப் பார்த்து அத்தனை பேரும் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டனர்.

இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர் இவர்தான்.. ஜாம்பவான் வீரரை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்!இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர் இவர்தான்.. ஜாம்பவான் வீரரை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்!

பேஸ் ஆப் பரிதாபங்கள்

பேஸ் ஆப் பரிதாபங்கள்

இந்த பேஸ்ஆப் ஆப் மூலமாக நமது தோற்றத்தை முற்றிலும் மாற்றித் தருகிறார்கள். பார்க்கவே படு ஜாலியாக இருக்கிறது. இதுதான் இப்போது டிரெண்டிங்காக உள்ளது. பலரும் இதை வைத்து பொழுதை படு வேகமாக ஓட்டிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ரோஹித் சர்மாவை இப்படித்தான் மாற்றி யுஸ்வேந்திர சஹல் கலாய்த்தார். இப்போது யுவராஜ் சிங் செய்துள்ளார்.

யுவராஜ் சிங் செய்த வேலை

யுவராஜ் சிங் செய்த வேலை

யுவராஜ் சிங் இந்திய. கிரிக்கெட் அணி வீரர்களை மொத்தமாக பெண்களாக மாற்றி போஸ்ட் போட்டுள்ளார். விராட் கோலியைப் பார்த்தால் படு தமாஷாக இருக்கிறது. அவருக்கு சுத்தமாக பெண் வேடம் பொருந்தவில்லை. தோனி செம க்யூட்டாக இருக்கிறார். அஸ்வினுக்கு பேசாமல் அஸ்வினி என்று பெயர் வைத்து விடலாம்.. அப்டி அச்சு அசலாக பெண்ணாக காட்சி தருகிறார்.

கேர்ள் பிரண்ட் யாரு

கேர்ள் பிரண்ட் யாரு

இந்த போட்டோக்களைப் போட்டு இதில் யார் உங்கள் கேர்ள் பிரண்ட் என்று கேட்டுள்ளார் யுவராஜ் சிங். உடனே வந்து எனக்கு புவனேஷ் குமார்தான் என்று பிட்டைப் போட்டு விட்டுப் போய் விட்டார் ஹர்பஜன் சிங். அவ்வளவுதான் ரசிகர்கள் வந்து புவனேஷ்குமார்தான் எங்களுக்கும் என்று ஜொள்ளு ஊற்ற ஆரம்பித்து விட்டனர். அது நியாயமாவும் தெரிகிறது. காரணம் அப்டியே படு சூப்பராக பெண்ணாக காட்சி தருகிறார்.

ஆமாம் போட்ட ருஷ்மா

ஆமாம் போட்ட ருஷ்மா

ஹர்பஜன் சிங் போட்ட கருத்துக்கு ஆமா போட்ட ஆசிஷ் நேஹ்ரா மனைவி ருஷ்மா, கரெக்ட் நானும் அதே சாய்ஸ்தான் என்று சொல்லியுள்ளார். நடிகர் ஆசிஷ் செளத்ரியோ ஒரு படி மேலோ போயே, புவனேஷ் குமார் செம ஹாட்டா இருக்கீங்க என்று கலாய்த்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் சிரிப்பு எமோஜிக்களைப் பறக்க விட்டுள்ளார்.

சஹல் வந்தார் பாருங்க

சஹல் வந்தார் பாருங்க

யுஸ்வேந்திர சஹலோ, யுவராஜ் சிங்கையே கலாய்த்துள்ளார். அனேகமாக உங்களையே நீங்க காதலிக்க வேண்டி வரும் யுவி என்று அவர் கலாய்த்துத் தள்ளியுள்ளார். இங்கேயும் நீங்க வந்துட்டீங்களா எஜமான் என்று சஹலை பலர் கலாய்த்துள்ளனர். இதில் விராட் கோலிக்குத்தான் ஆதரவு குறைவு. அதேபோல கே.எல். ராகுலுக்கும் ஆதரவு பெரிதாக இல்லை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.. அடுத்தடுத்து அட்டாக் பண்ணுங்க.

Story first published: Tuesday, June 23, 2020, 21:20 [IST]
Other articles published on Jun 23, 2020
English summary
Former player Yuvraj Singh has made whole Indian team to women using Faceapp
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X