For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் சிங்கிற்கு இவ்வளவுதான் மரியாதையா? பரபரப்பை கூட்டிய ரோஹித்.. கொட்டித் தீர்த்த ரசிகர்கள்!

Recommended Video

யுவராஜ் சிங்கிற்கு இவ்வளவுதான் மரியாதையா? பரபரப்பை கூட்டிய ரோஹித்

மும்பை : யுவராஜ் சிங் நேற்று சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு முறையான வழி அனுப்புதல் நடத்தப்படவில்லை என கூறி வருகின்றனர்.

யுவராஜ் சிங்கிற்கு பிசிசிஐ சரியான முறையில் மரியாதை செய்து, அவரது ஓய்வை சிறப்பிக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது?

நாயகன் யுவராஜ் சிங்

நாயகன் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். இடையே பல வெற்றி - தோல்விகள், காயங்கள், புற்றுநோய், டெஸ்ட் அணியில் இடம் மறுப்பு, பார்ம் அவுட், உலகக்கோப்பை நாயகன் என எல்லாவற்றையும் பார்த்து விட்டு, தற்போது அணியில் வாய்ப்பு இல்லாத நிலையில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஒரு கடைசி போட்டி

ஒரு கடைசி போட்டி

யுவராஜ் சிங் தன் ஓய்வு அறிவிப்பின் போது பேசுகையில், தான் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும், தனக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து வழி அனுப்ப பிசிசிஐ உறுதி அளித்தது. ஆனால், தான் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறாவிட்டால், வீட்டுக்கு செல்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால், உண்மையில் யுவராஜ் சிங் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், ஒன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். அவர் பிசிசிஐ-யை குற்றம்சாட்டி இதை கூறவில்லை என்றாலும், இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியது.

ரோஹித் சர்மா பதிவு

இதற்கிடையே, இந்திய வீரர் ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பதிவில் உங்களுக்கு சிறந்த வழி அனுப்புதல் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்த, ரசிகர்கள் இதை "#YuviDeservesProperFarewell" என டிரென்டிங் செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, June 11, 2019, 20:35 [IST]
Other articles published on Jun 11, 2019
English summary
#YuviDeservesProperFarewell Yuvraj Singh deserves proper farewell trending after retirement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X