For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப உள்ள இந்திய அணியின் லட்சணம் இதுதான்.. உண்மையை புட்டுபுட்டு வைத்த கம்பீர், யுவராஜ் சிங்!

மும்பை : தற்போதைய இந்திய அணிக்கும், தாங்கள் ஆடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக் காட்டி உள்ளனர் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர்.

Recommended Video

இப்ப உள்ள இந்திய அணியை பற்றி கூறிய யுவராஜ், கம்பீர்

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் கேள்வியை யுவராஜ் சிங்கிடம் கேட்டது தற்போதைய இந்திய அணியின் முக்கிய வீரர் ரோஹித் சர்மா.

யுவராஜ் சிங் சொன்ன பதிலை ஆமோதித்து கௌதம் கம்பீரும் பின்னர் கருத்து கூறி உள்ளார்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

2000மாவது ஆண்டுகளில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே என பாதி அணி முழுவதும் மூத்த வீரர்கள் நிறைந்து இருந்தனர். அவர்களின் ஒழுக்கம் காரணமாக நல்ல பெயருடன் விளங்கினர். இளம் வீரர்கள் இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டனர்.

ஒழுக்கம் கற்றுக் கொண்டனர்

ஒழுக்கம் கற்றுக் கொண்டனர்

அதே ஆண்டுகளில் வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான், கௌதம் கம்பீர், தோனி என அப்போதைய பல இளம் வீரர்கள் அந்த மூத்த வீரர்களிடம் இருந்து பல அனுபவங்களை, யோசனைகளை பெற்றுக் கொண்டனர். ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டனர்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

அதன் காரணமாகவே, சௌரவ் கங்குலி காலத்தை விட தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி விராட் கோலி தலைமையில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து உலகின் முன்னணி அணியாக உள்ளது.

எதிர்காலம் பற்றிய சந்தேகம்

எதிர்காலம் பற்றிய சந்தேகம்

ஆனால், இனி அடுத்து வரும் தலைமுறையினர் இந்த வெற்றிகளை எடுத்துச் செல்வார்களா? கோலிக்கு பின் சரியான தலைமை அமையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு காரணம், இந்திய அணியின் மூத்த வீரர்கள், அனுபவம் கொண்ட சிறந்த வீரர்கள் என குறிப்பிட்டு சொல்ல அதிக வீரர்கள் இல்லை.

ரோஹித் சந்திப்பு

ரோஹித் சந்திப்பு

இந்த நிலையில், ரோஹித் சர்மா சமூக வலைதளத்தில் யுவராஜ் சிங்கை நேரலை வீடியோவில் சந்தித்தார். அப்போது அவரிடம் இப்போதைய இந்திய அணிக்கும், யுவராஜ் சிங் காலத்திய இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசத்தை கேட்டார்.

யுவராஜ் சிங் அதிரடி

யுவராஜ் சிங் அதிரடி

அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் இப்போதைய இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா தவிர வேறு எந்த வீரரையும் முன்னுதாரணமாக கூற முடியவில்லை என வெளிப்படையாக கூறினார் மேலும், அப்போதைய மூத்த வீரர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர் என்றார்.

கம்பீர் பதில்

கம்பீர் பதில்

பின்னர், யுவராஜ் சிங் பதிலை ஆமோதித்து கௌதம் கம்பீரும் பேசி உள்ளார். 2000மாவது ஆண்டுகளில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, லக்ஷ்மன், சௌரவ் கங்குலி, சச்சின் ஆகியோர் அணியை வழி நடத்தினார்கள் என சுட்டிக் காட்டினார் கம்பீர்.

உதவி அவசியம்

உதவி அவசியம்

இளம் வீரர்கள் மோசமான பார்மில் இருக்கும் போது மூத்த வீரர்கள் அவர்கள் அருகே இருந்து உதவி செய்ய வேண்டியது அவசியம். இப்போது, தங்கள் சொந்த ஆர்வத்தில் இளம் வீரர்களுக்கு உதவும் மூத்த வீரர்கள் இந்திய அணியில் போதிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன் என கம்பீர் கூறி உள்ளார்.

Story first published: Sunday, April 12, 2020, 21:01 [IST]
Other articles published on Apr 12, 2020
English summary
Yuvraj Singh and Gambhir pointed out main issue in present Indian team, comparing the Indian team of 2000’s.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X