For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

மும்பை : 2019ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில் ஒருவர் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங். மற்றொருவர் இளம் இந்தியா வீரர் ரிஷப் பண்ட்.

தோனி, கோலி போன்ற நட்சத்திரங்கள் கூட டாப் டென்னில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!

புகழ், விமர்சனம்

புகழ், விமர்சனம்

ரிஷப் பண்ட் எப்படி முதல் 10 இடங்களில் இடம் பெற்றார்? என ஆச்சரியம் எழுந்தாலும், ஒரே ஆண்டில் புகழையும், விமர்சனத்தையும் அளவுக்கு அதிகமாக சந்தித்தார் ரிஷப் பண்ட்.

ஓய்வை அறிவித்தார் யுவராஜ்

ஓய்வை அறிவித்தார் யுவராஜ்

யுவராஜ் சிங் கடந்த ஜூன் 10, 2019 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். சுமார் 17 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய யுவராஜ் சிங் ஓய்வை அறிவித்த போது அது அதிர்வலைகளை உண்டாக்கியது.

இரண்டு தலைமுறை ரசிகர்கள்

இரண்டு தலைமுறை ரசிகர்கள்

யுவராஜ் சிங்கிற்கு குறைந்தது இரண்டு தலைமுறை இந்திய ரசிகர்கள் உள்ளனர். 2002இல் இருந்து கிரிக்கெட் ஆடி வரும் யுவராஜ் சிங் இரண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

வியப்பில் ஆழ்த்தியவர்

வியப்பில் ஆழ்த்தியவர்

மேலும், புற்றுநோய் பாதிப்பில் சிக்கி, அதில் இருந்து மீண்டு வந்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார் யுவராஜ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்த அவர், 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெற முயற்சி செய்தார்.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

ஆனால், அது நிறைவேறாத நிலையில் அவர் தன் ஓய்வு முடிவை உலகக்கோப்பை நடக்கும் போதே அறிவித்தார். அப்போது தான் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளார் யுவராஜ் சிங்.

டி20 தொடர்கள்

டி20 தொடர்கள்

மேலும், ஐபிஎல் தொடரில் சில போட்டிகளிலும், பிற நாடுகளின் உள்ளூர் டி20 போட்டிகளிலும் ஆடிய போதும் யுவராஜ் சிங் ரசிகர்களால் கூகுளில் தேடப்பட்டார். அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் வரிசையில் யுவராஜ் சிங் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

ரிஷப் பண்ட் ஆறாம் இடம்

ரிஷப் பண்ட் ஆறாம் இடம்

இதே பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அவர் 2018ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடி வந்தார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உலகக்கோப்பை வரை பலரும் குரல் எழுப்பி வந்தனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

உலகக்கோப்பை தொடருக்கு பின் ரிஷப் பண்ட் சொதப்பலாக ஆடிய நிலையில், அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், போட்டிகளில் அவர் சொதப்பும் போது ரசிகர்கள் தோனி பெயரைக் கூறி அவருக்கு இவர் மாற்று இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டு காரணங்கள்

இரண்டு காரணங்கள்

ரிஷப் பண்ட் ஒரே ஆண்டில் புகழின் உச்சியையும், பெரும் வீழ்ச்சியையும் சந்தித்து, இரண்டு காரணங்களுக்காகவும் கூகுளில் அதிகம் தேடப்பட்டு, ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Friday, December 13, 2019, 18:38 [IST]
Other articles published on Dec 13, 2019
English summary
Year Ender 2019 : Yuvraj Singh and Rishabh Pant are the most searched sports personalities in 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X