இனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்!

Ravi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்- வீடியோ

டெல்லி: தோனிக்கு எதிராக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து புகார்களை வைத்து வருகிறார். ஆனால் இதற்கு யுவராஜ் சிங் எந்த விதமான எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

தோனி மீது தொடர்ந்து திடுக்கிடும் புகார்களை யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அடுக்கி வருகிறார். தோனி மட்டும் தனி ஆளாக யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை, அதற்கு பின் பலர் இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனலில் தோனி இந்தியா தோற்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினார். தோனி தான்தான் உலகக் கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார், என்று நிறைய குற்றச்சாட்டுகளை யோக்ராஜ் சிங் வைத்துள்ளார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இது யுவராஜ் சிங்கிற்கு ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. யுவராஜ் சிங் தோனி இடையே பிரச்சனை இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது யோக்ராஜ் சிங் பேசி வருவதை பார்த்தால் உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நிறைய பிரச்சனை நடந்து இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

என்ன அமைதி

என்ன அமைதி

ஆனால் யுவராஜ் சிங் இதுவரை இதுகுறித்த எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய அப்பா சொல்வது தவறு அல்லது சரி என்று யுவராஜ் சிங் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தோனி மீது சுமத்தப்படும் களங்கம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு யுவராஜ் சிங் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.

செய்யவில்லை

செய்யவில்லை

யுவராஜ் சிங் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் இருந்த போதே சர்ச்சையானது. ஆனால் இந்திய அணி செமி பைனல் விளையாடிய போது, தோனி மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டு இருந்தார். அவரின் அனுபவம் அணிக்கு உதவும் என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டார்.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் இப்போது அப்பாவின் கருத்துக்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கிறார். யுவராஜ் சிங் மேலும் இப்படி அமைதியாக இருக்க கூடாது. என்ன பிரச்சனை என்பதை அவர் உடைத்து பேச வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Yuvraj Singh at least opens up now about his father Yograj comments on Dhoni.
Story first published: Wednesday, July 17, 2019, 13:33 [IST]
Other articles published on Jul 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X