For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2011ம் ஆண்டின் உலக கோப்பை நாயகன்.. அன்பு யுவி…!! மறக்கமுடியுமா உங்களின் சாதனைகளை… !!

Recommended Video

உலக கோப்பை நாயகன்.. சாதனைகள் பல படைத்த யுவராஜ் சிங்

மும்பை:இந்தியக் கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத பக்கங்கள் எனலாம்.

யுவி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் யுவராஜ் சிங் பிறந்தது 1981ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி. தந்தை பெயர் யோகராஜ் சிங், தாயார் ஷப்னம். அவரது மனைவியின் பெயர் ஹசீல் கீச்.

சிறுவயது முதலே கிரிக்கெட்டுக்காக வளர்க்கப்பட்டவர் யுவராஜ் சிங் என்று சொல்லலாம். காரணம் அவரது தந்தையும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். தந்தையின் கண்காணிப்பிலும், பயிற்சியிலும் உருவாக்கப்பட்ட யுவராஜ், தமது 13 வயதில் பஞ்சாப் அணிக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கு அணியில் இடம்பெற்றார். அங்கிருந்து தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குகிறது எனலாம்.

ஒருநாள் வானத்தில் இருந்தேன்.. மறுநாளே பாதாளத்தில் விழுந்தேன்.. கேன்சர் குறித்து யுவி உருக்கம்! ஒருநாள் வானத்தில் இருந்தேன்.. மறுநாளே பாதாளத்தில் விழுந்தேன்.. கேன்சர் குறித்து யுவி உருக்கம்!

பஞ்சாப் அணியில் இடம்

பஞ்சாப் அணியில் இடம்

தமது சிறந்த ஆட்டத்தின் வழியாக அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதன் பின்னர் பஞ்சாப் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றார். 1997ம் ஆண்டு.....இந்திய அணியின் முதல் தர போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

இளம் வயதில் முதல் போட்டி

இளம் வயதில் முதல் போட்டி

இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 89 ரன்கள் இன்றும் பேசப்படுபவை. இத்தனைக்கும் யுவி எதிர்கொண்டது வெறும் 55 பந்துகள்தான். அதன் பிறகு 2000ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

அந்த தொடரில் மிக சிறப்பாக ஆடி அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தவர் யுவுராஜ். அன்றைய காலக்கட்டத்தில் அவருடன் சம கால அளவில் கிரிக்கெட்டில் பயணித்தவர் முகமது கைப். இவர்கள் இருவரும் தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலககோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கியவர்கள்.

தொடர் நாயகன் யுவி

தொடர் நாயகன் யுவி

அந்த தொடரில் யுவராஜ் தொடர் நாயகன் விருது பெற்றார். அது தான் அவர் இந்திய அணியில் நுழைவதற்கான மாஸ்டர் கார்டாக இருந்தது. 2000ம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகளில் கால் பதிக்க ஆரம்பித்தார். அந்த ஆண்டில் அவரின் திறமை வெளியுலகுக்கு தெரிய வந்தது.

பால் வடியும் அந்த முகம்

பால் வடியும் அந்த முகம்

2000மாவது ஆண்டில் நடந்த ஐசிசி நாக் அவுட் டிராபி தொடரில், கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி. கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் யுவராஜ் சிங். பால் வடியும் முகத்துடன் களமிறங்கிய யுவராஜ், அதே தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து, முதன் முதலாக தனது திறமையை உலகத்துக்கு வெளிக்காட்டினார்.

நாட்வெஸ்ட் சீரிஸ்

நாட்வெஸ்ட் சீரிஸ்

ஆனால். 2001 மற்றும் 2002 கால கட்டத்தில் இந்திய அணியில் கழற்றி விடப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கான எதிரான தொடரை கைப்பற்ற யுவராஜின் ஆட்டம் கை கொடுத்தது. 2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

அந்த போட்டியில் இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மட்டையுடன் களம் இறங்கிய யுவி சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தார். அவருடன் இணைந்தது முகமது கைப். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். இறுதிப் போட்டியில் வெற்றி கிடைக்க ... மறக்க முடியாத தொடராக அமைந்தது.

முதல் சதம் எப்போது?

முதல் சதம் எப்போது?

2003ம் ஆண்டில் டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக முதல் சதம் அடித்தார். அதாவது அணியில் இடம்பிடித்து... 3 ஆண்டுகள் கழித்து தான் சதம் அடித்தார். யார்க்ஷையர் கவுண்டி அணிக்கு சச்சினுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் யுவராஜ் தான். அதே ஆண்டில் நியூசி.அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

மறக்க முடியாத சென்டிமென்ட்

மறக்க முடியாத சென்டிமென்ட்

அதன்பிறகு, இந்திய அணியில் அசத்தல் ஆட்டத்தை அரங்கேற்றினார். பின்னர், 2006ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவானார். ஆல் ரவுண்டரான அவர், பேட்டிங்கில் 50 ரன்கள் கடந்துவிட்டால் அந்த போட்டியில் இந்தியா ஜெயிக்கும் என்ற சென்டிமென்ட் இருந்தது. பல முறை இந்த சென்டிமென்ட் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

உலக சாதனை

உலக சாதனை

2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்.... ஸ்டூவர்ட் பிராட் பந்து வீசுகிறார். மொத்தம் 6 பந்துகள்.... அனைத்திலும் சிக்சர் விளாசி உலக சாதனை புரிந்தார்.

கலக்கல் நாயகன்

கலக்கல் நாயகன்

2011ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அந்த தொடரில் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை தமது பேட்டிங்கால் வீட்டுக்கு அனுப்பியவர். உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று சாதனை படைத்தவர்.

14 கோடிக்கு ஏலம்

14 கோடிக்கு ஏலம்

கடந்த 2011 உலகக்கோப்பைப் போட்டியில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகள், 4 மேன் ஆப் தி மேட்ச் விருதுகள், சிறந்த ப்ளேயர் என அதிரடி காட்டினார். ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரையில் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணி சார்பாக 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அடிப்படை விலை

அடிப்படை விலை

பின்னர் டெல்லி அணி சார்பில் 16 கோடி ரூபாய்க்கும், அதற்கு அடுத்த 2016-ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக 7 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப் பட்டார். இறுதியாக மிகவும் அடிப்படையான விலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் யுவி.

Story first published: Monday, June 10, 2019, 16:41 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
Yuvraj singh contributions to indian team is un forgettable.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X