For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டுமென்றே பவுலரை இடித்து தள்ளிய உத்தப்பா.. பதறி ஓடி வந்த யுவராஜ்சிங்

By Veera Kumar

டெல்லி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சித்தார்த் கவுலை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ராபின் உத்தப்பா தனது இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற இவ்விரு அணிகள் நடுவேயான போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, வார்னரின் அசுர வேக சதம் உதவியோடு 209 ரன்களை குவித்தது.

இதையடுத்து 210 என்ற இமாலய இலக்கை விரட்ட கொல்கத்தா பேட் செய்ய வந்தது. கேப்டன், கவுதம் கம்பீரும், சுனில் நரைனும் ஓப்பனிங்கில் இறங்கினர்.

நடையை கட்டிய நரைன்

நடையை கட்டிய நரைன்

கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிகள் காத்திருந்தன. தொடக்க வீரர் சுனில் நரைன் 1 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் பந்து வீச்சில் நடையை கட்டினார்.

கம்பீரும் வெளியேறினார்

கம்பீரும் வெளியேறினார்

இதற்கு அடுத்த ஓவரிலேயே கொல்கத்தா அணி கேப்டன், கவுதம் கம்பீர், ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சித்தார்த் கவுல் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டார்.

இடித்து தள்ளிய உத்தப்பா

இடித்து தள்ளிய உத்தப்பா

ஆனால் அதே ஓவர் முடிவில் ராபின் உத்தப்பா ஒரு பவுண்டரி விளாசினார். இதன்பிறகு ஓவர் மாற்றத்திற்காக ராபின் உத்தப்பா மறுமுனைக்கு நடந்து வந்தார். அப்போது, கவுலை இடித்து தள்ளினார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

யுவராஜ்சிங் விரைந்தார்

யுவராஜ்சிங் விரைந்தார்

மேலும் சித்தார்த் கவுலிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ராபின் உத்தப்பா. இதை பார்த்த ஹைதராபாத் வீரர் யுவராஜ்சிங், இருவர் நடுவேயும் புகுந்தார். ராபின் உத்தப்பாவிடம் பேச்சு நடத்தி அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

மீண்டும் பேச்சு

மீண்டும் பேச்சு

இதன்பிறகு, 7வது ஓவரின்போது மழை வந்து ஆட்டம் தடைபட்ட போது, உத்தப்பாவும், யுவராஜ் சிங்கும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, யுவராஜ்சிங், உத்ப்பாவின் செயலில் திருப்தியில்லை என கூறியதை போல தெரிந்தது. இதை ராபின் உத்தப்பாவும் ஒப்புக்கொண்டு சிரித்தபடி இருந்ததை ரசிகர்கள் பார்த்தனர்.

Story first published: Monday, May 1, 2017, 13:50 [IST]
Other articles published on May 1, 2017
English summary
Kolkata Knight Riders batsman Robin Uthappa and Sunrisers Hyderabad's fast bowler Siddarth Kaul got involved in a bit of an altercation during an Indian Premier league match at the Rajiv Gandhi International Stadium in Hyderabad on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X