For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நாளை மறக்க முடியுமா? பிளின்டாப் செய்த தப்புக்கு.. பிராட்-ஐ கண்ணீர் விட வைத்த யுவராஜ் சிங்!

Recommended Video

Watch Video : 12 years of Yuvraj singh six sixes

மும்பை : சுமார் 12 ஆண்டுகளுக்கு முன், இதே செப்டம்பர் 19 அன்று நடந்த ஒரு சம்பவத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாது.

ஆம், இதே நாளில் தான் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து அள்ளு கிளப்பினார். அந்த சம்பவம், இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தான் உண்மை.

பலருக்கும் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார் என்பது மட்டும் தான் தெரியும். அன்று என்ன தான் நடந்தது?

எந்தப் போட்டியில் நடந்தது?

எந்தப் போட்டியில் நடந்தது?

2007இல் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் இருந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது.

பிளின்டாப் வீசிய 17வது ஓவர்

பிளின்டாப் வீசிய 17வது ஓவர்

பிளின்டாப் 17வது ஓவரை வீசினார். அப்போது தோனி, யுவராஜ் சிங் பேட்டிங் செய்து வந்தனர். அந்த ஓவரின் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் வரிசையாக இரண்டு ஃபோர் அடித்தார் யுவராஜ் சிங்.

பிளின்டாப் சீண்டல்

பிளின்டாப் சீண்டல்

பிளின்டாப் அப்போது காயத்தோடு பந்து வீசிக் கொண்டு இருந்தார். அந்த நிலையில், தன் ஓவரில் வரிசையாக பவுண்டரி அடித்ததை கண்டு பொங்கிய பிளின்டாப், யுவராஜ் சிங்கை சீண்டினார்.

அம்பயர்கள் தலையீடு

அம்பயர்கள் தலையீடு

யுவராஜ் சிங் திருப்பி அவரை திட்டினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அம்பயர்கள் தலையிட்டு, பிளின்டாப் - யுவராஜ் சிங், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த ஓவர்

பிளின்டாப் சீண்டலால் பயங்கர கோபத்தோடு இருந்தார் யுவராஜ் சிங்,. அடுத்த ஓவரை வீச வந்தார் அப்போது இளம் வீரராக இருந்த ஸ்டூவர்ட் பிராட். யுவராஜ் சிங் அந்த ஓவரை எதிர் கொண்டார்.

பறந்த ஆறு சிக்ஸ்

அந்த ஓவரின் ஆறு பந்துகளையும், ஆறு விதமான ஷாட்கள் ஆடி சிக்ஸருக்கு பறக்க விட்டார் யுவராஜ் சிங். அவர் நான்கு சிக்ஸர் அடித்த உடன், இங்கிலாந்து அணி கூடி நின்று அவரை சிக்ஸர் அடிக்காமல் நிறுத்துவது பற்றி பேசியது.

சாதனை செய்தார்

அப்படி இருந்தும் யுவராஜ் சிங்கை நிறுத்த முடியவில்லை. கடைசி இரண்டு பந்திலும் சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் முதன் முறையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த வீரர் மற்றும் உலக அளவில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அரைசதம் அடித்த யுவராஜ்

அரைசதம் அடித்த யுவராஜ்

மேலும், 12 பந்தில் அரைசதம் கடந்த யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் அதி வேக அரைசதம் அடித்த வீரராக இன்று வரை இருக்கிறார். அந்தப் போட்டியில் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், 3 ஃபோர் மற்றும் 7 சிக்ஸ் அடித்து இருந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அந்தப் போட்டியில் யுவராஜ்-இன் ஆறு சிக்ஸர்களை அடுத்து இந்திய அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்டூவர்ட் பிராட் பரிதாபம்

அன்றைய தினம், பிளின்டாப் செய்த தவறுக்கு ஸ்டூவர்ட் பிராட் மரண அடி வாங்கினார். இன்று வரை அந்த சம்பவத்தை மறக்கவில்லை பிராட். பல முறை சமூக வலைதளங்களில் தனக்கு நேர்ந்த கொடுமையை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

Story first published: Friday, September 20, 2019, 9:59 [IST]
Other articles published on Sep 20, 2019
English summary
Yuvraj Singh hit 6 sixes on September 19, 2007. What happened on that day?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X