For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக சாதனை படைப்பு... பொல்லார்ட்-க்கு மகிழ்ச்சியை தந்த யுவ்ராஜ் சிங்கின் வார்த்தைகள்... ட்வீட் இதோ

வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் உலக சாதனை படைத்த பொல்லார்ட்-க்கு யுவ்ராஜ் சிங் உடனடியாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கெயீரன் பொல்லார்ட் காட்டிய அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

போட்டியின் போது இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் யுவ்ராஜ் சிங்கின் சிக்ஸர் சாதனையை பொல்லார்ட்-ம் செய்து அசரடித்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் (26), இவின் லிவிஸ் (28) சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர்.

 இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

அவர்கள் வலுவான நிலை பெற்றபோது 4ஆவது ஓவரை வீசிய ஸ்பின்னர் அகிலா தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், லிவிஸ், கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். பின்னர் களமிறங்கிய ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்சயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு யுவ்ராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.

யுவ்ராஜ் சிங்

யுவ்ராஜ் சிங்

இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். அதே போல் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்செல் கிப்ஸும் இதனை செய்தார். இந்நிலையில் நேற்று பொல்லார்ட் அதனை சமன் செய்துள்ளார். மேலும் ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

யுவ்ராஜ் ட்வீட்

யுவ்ராஜ் ட்வீட்

பொல்லார்ட்-ன் உலக சாதனைக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதன்முதலா இச்சாதனையை செய்த இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்கும் பொல்லார்ட்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 6 பந்துகளில் 6 சிக்ஸர் போட்ட கிளப்பிற்கு வரவேற்கிறேன் பொல்லார்ட் என தெரிவித்துள்ளார்.

சிந்தனை

சிந்தனை

தன் சாதனை குறித்து பேசியுள்ள பொல்லார்ட், 6 வது பந்தை சிக்ஸருக்கு விரட்டுவதற்கு முன்னர் என மனதில் பல சிந்தனைகள் ஓடின. சிக்ஸர் அடிக்கலாமா, அல்லது டிஃபன்ஸ் செய்யலாமா என யோசித்தேன். பின்னர் பந்துவீச்சாளர் எனது கால்களை நோக்கி குறிவைத்து பந்தை வீசியதால், வாய்ப்பை பயன்படுத்திக்கொள் போலி, என எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்படிதான் எனது எல்லா போட்டிகளையும் ஆடுகிறேன் என தெரிவித்தார்.

Story first published: Thursday, March 4, 2021, 17:21 [IST]
Other articles published on Mar 4, 2021
English summary
Yuvraj Singh reaction for Pollard hits six sixes in an over against Srilanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X