ஒரு சதத்திற்கு பின் இவ்ளோ பெரிய கதையா? யுவ்ராஜ் சிங் போட்ட ஒரு ட்வீட்.. நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!

ஒரு சதத்திற்கு பின் இவ்ளோ பெரிய கதையா? யுவ்ராஜ் சிங் போட்ட ஒரு ட்வீட்.. நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!

மேன்செஸ்டர்: ரிஷப் பண்ட்-ன் சதம் குறித்து யுவ்ராஜ் சிங் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் திட்டத்தில் 3 மாற்றம்.. 3வது ஒருநாள் போட்டியில் செய்தே தீர வேண்டும்.. யோசிப்பாரா ரோகித்? இந்தியாவின் திட்டத்தில் 3 மாற்றம்.. 3வது ஒருநாள் போட்டியில் செய்தே தீர வேண்டும்.. யோசிப்பாரா ரோகித்?

இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் பார்ட்னர்ஷிப் தான்.

 இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

259 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சொதப்பியதால் 72 /4 ரன்களுக்கு தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த பண்ட் - பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை 205/5 என கொண்டு சென்றனர். அதாவது 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பண்ட் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இவருக்கு உறுதுணையாக நின்ற ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவர் பந்துவீச்சிலும் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

 20 ஆண்டுகள் வரலாறு

20 ஆண்டுகள் வரலாறு

இந்நிலையில் இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 20 வருடத்திற்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போது 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த யுவ்ராஜ் சிங் - முகமது கைஃப் ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோப்பையை வென்று கொடுத்தனர்.

அதே காம்பினேஷன்

அதே காம்பினேஷன்

இந்த சம்பவத்தின் 20வது ஆண்டு தினம் ஜூலை 13ம் தேதிதான் கொண்டாடப்பட்டது. எனவே 4 நாட்களில் அதே சம்பவத்தை நினைவுக்கூர்ந்துள்ளனர் ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி. ஏனென்றால் நாட்வெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் வலது - இடது கை காம்போவில் தான் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

யுவ்ராஜின் ட்வீட்

யுவ்ராஜின் ட்வீட்

இது ஒருபுறம் இருக்க, இவர்கள் இன்னிங்ஸ் குறித்து யுவ்ராஜ் சிங் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில், போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டிடம் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தைக்கான பலன் இன்று கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் அவர்களின் ஆட்டத்தை பார்க்க சிறப்பாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Yuvraj singh's tweet on Rishabh pant ( ரிஷப் பண்ட் குறித்து யுவ்ராஜ் சிங் ட்வீட் ) ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் பார்ட்னர்ஷிப் குறித்து யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
Story first published: Monday, July 18, 2022, 14:32 [IST]
Other articles published on Jul 18, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X