For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம சுவிட்ச் ஹிட்.. அப்படியே பழைய யுவராஜ் சிங்கை பார்த்த மாதிரியே இருந்துச்சு!

டெல்லி : உள்ளூர் போட்டி ஒன்றில் யுவராஜ் சிங் அடித்த சுவிட்ச் ஹிட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

யுவராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக பார்ம் அவுட் ஆகி இருக்கும் நிலையில், அவரது பழைய பாணியில் அதிரடியாக அடித்த சுவிட்ச் ஹிட் ரசிகர்களை பழைய நினைவுகளில் மூழ்க வைத்துள்ளது.

அதிரடியாக சிக்ஸ் அடித்த யுவராஜ்

ஏர் இந்தியா அணிக்காக ஆடி வரும் யுவராஜ் சிங், மாலத்தீவு அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் சுவிட்ச் ஹிட் சிக்ஸ் அடித்தார். பந்துவீச்சாளர் யுவராஜ் அடித்து ஆடப் போகிறார் என தெரிந்ததும், பந்தின் நீளத்தை மாற்றினார். எனினும், யுவராஜ் அதிரடியாக சிக்ஸ் அடித்தார்.

ரன் குவிக்க திணறல்

ரன் குவிக்க திணறல்

யுவராஜ் சிங் நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக ஜூன் 2017இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடினார். இடையே ரஞ்சி தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடினாலும், அதிலும் பெரியளவில் ரன் குவிக்கவில்லை.

ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ்

இந்த நிலையில் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆட நினைத்தாலும் அது வெறும் கனவாகவே உள்ளது. அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ளார்.

1 கோடிக்கு ஏலம்

1 கோடிக்கு ஏலம்

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் யுவராஜ் ரன் குவிக்க முடியாமல் திணறினார். அதனால், இந்த ஆண்டு ஐபிஎல்-லுக்கான ஏலத்தில் இரண்டு சுற்றுகளில் ஏலம் போகாத யுவராஜ் சிங், கடைசி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல்-இல் ஆடுவாரா?

ஐபிஎல்-இல் ஆடுவாரா?

தற்போது சுவிட்ச் ஹிட் எல்லாம் அடித்து தான் இன்னும் அதிரடி வீரர் தான் என கூறி இருக்கும் யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் களம் இறங்கி ஆடுவாரா? ரசிகர்களை தன் அதிரடியால் குஷியாக்குவாரா?

Story first published: Monday, February 18, 2019, 18:18 [IST]
Other articles published on Feb 18, 2019
English summary
Yuvraj Singh smashes a switch hit six and reminds us his old days
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X