For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: 38 வயசில ஒண்ணு, ரெண்டு, மூணு..! அப்புறம் ஒரு டைவ்..! அசத்தல் கேட்ச் பிடித்த நம்மூரு நாயகன்

Recommended Video

Global T20 | Yuvaraj singh catch | 38 வயசில அசத்தல் கேட்ச் பிடித்த யுவராஜ்

டொராண்டோ: 38 வயதிலும் 20 ஓவர் போட்டியில் அதிரடியாக கேட்ச் பிடித்து அசத்தியிருக்கிறார் யுவராஜ் சிங்.

குளோபல் டி20 தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில், யுவராஜ் சிங், டூ பிளெசிஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

நேற்று டொரெண்டோ நேஷனல்ஸ், ப்ராம்ப்டன் உல்வ்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டொரெண்டோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 20 ஓவரில் 222 ரன்களை எடுத்தது.

சிறப்பான ஆரம்பம்

சிறப்பான ஆரம்பம்

அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சே 66 ரன்களை குவித்தார். இதையடுத்து விளையாடிய டொரெண்டோ அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.

21 பந்தில் அரைசதம்

21 பந்தில் அரைசதம்

சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டு, வாண வேடிக்கை நிகழ்த்தினார். 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே நவாஜ் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோல்வி

தோல்வி

இறுதியாக டொரெண்டோ அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போடியில் யுவ்ராஜ் சிங் 51 ரன்கள், 1 விக்கெட், 2 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

சிம்மன்ஸ் பந்து

அவர் பிடித்த 2 கேட்சுகளில் ஒரு கேட்ச் மரண மாசாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான லெண்டில் சிம்மன்ஸ் அடித்த பந்தை தட்டுத் தடுமாறி பிறகு யுவராஜ் பிடித்தார்.

வைரலான கேட்ச்

வைரலான கேட்ச்

அந்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 38 வயதில் இது போன்ற ஒரு கேட்சை பாய்ந்து சென்று பிடித்த யுவராஜ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி, அந்த கேட்சையும் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Sunday, August 4, 2019, 16:16 [IST]
Other articles published on Aug 4, 2019
English summary
Yuvraj singh stunning catch goes viral in global t 20 canada.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X