For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்டியிருந்த மனுசன் அவரு..! ஐபிஎல் ஆட்டத்திலும் சேர்க்கல.. காசும் தரல.. அசிங்கப்பட்ட அதிரடி மன்னன்

மும்பை: ஐபிஎல்லில் யுவராஜ் சிங்கிற்கு சரியான மரியாதை இல்லை, அவருக்கான பணமும் தரவில்லை என்று முன்னாள் வீரர் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு துறையானாலும் உச்சத்தில் இருக்கும் போது கிடைக்கின்ற பணம், பெயர், புகழ் ஆகியவை வீழ்ச்சியில் இருக்கும் போது பக்கத்தில் இருக்காது. அதற்கு அரசியல் உலகத்திலும், திரையுலகத்திலும் ஏராளமானோரை உதாரணமாக கூறலாம்.

இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட் உலகத்திலும் உண்டு. விளையாட்டுகளில் மற்ற போட்டிகளை விட இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு அதிகம். அதனால் தான் ஐபிஎல் தொடர் இந்தியாவில் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது.

கடைசி ஓவர் வரை திணறிய பெங்களூர்.. கேப்டன் கோலியின் சொதப்பல் தான் காரணம்! கடைசி ஓவர் வரை திணறிய பெங்களூர்.. கேப்டன் கோலியின் சொதப்பல் தான் காரணம்!

மரியாதை இல்லை

மரியாதை இல்லை

அந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் ஜாம்பவானாக, வெற்றி வீரராக, சிக்சர் மன்னராக திகழ்ந்த ஒருவருக்கு மரியாதை இல்லை என்றால் எப்படி இருக்கும்? அதுவும் ஐபிஎல் தொடரில் பணமே தரவில்லை என்றால் கொதிக்க மாட்டீர்கள்?

பொங்கிய கம்பீர்

பொங்கிய கம்பீர்

அப்படி ஒரு கொதிநிலைக்கு போயிருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். அவர் பொங்கியது அவருக்காக அல்ல... யுவி என்று அன்போட அனைவராலும் அழைக்கப்படும் யுவராஜ் சிங்குக்காக தான்.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

2000ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக ஆடி வரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அவர்.

அணியில் வாய்ப்பில்லை

அணியில் வாய்ப்பில்லை

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியவர் என்ற அரிய சாதனையை படைத்த யுவி, 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமானார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பங்காற்றிய அவர், 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக ஆடினார். பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அடிப்படை விலை

அடிப்படை விலை

அதிரடி மன்னனாக, ஜாம்பவனாக திகழ்ந்த அவரை ஐபிஎல் ஏலத்தில் கைப்பற்ற போட்டா போட்டி நடக்கும். ஆனால்... நிலைமையோ இப்போது மாறியிருக்கிறது. நடப்பு சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் வரவில்லை.

ரூ.1 கோடிக்கு ஏலம்

ரூ.1 கோடிக்கு ஏலம்

2ம் கட்ட ஏலத்தில் தான் யுவராஜ் விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என கடந்த சீசன் வரை 5 அணிகளுக்காக ஆடிய யுவராஜ் சிங்கை, இந்த சீசனிற்கு எந்த அணியும் எடுக்க முன்வராத நிலையில், அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.

மனம் கலங்கும் கம்பீர்

மனம் கலங்கும் கம்பீர்

தொடக்கத்தில் சில போட்டிகளில் களமிறங்கி ஆடினாலும், பின்னர் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷான் களமிறக்கப்பட்டு வருகிறார். அவரின் இந்த நிலை கண்டு... மனம் கலங்கி போயிருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

அவமானம்

அவமானம்

யுவராஜ் குறித்து அவர் கூறியிருப்பதாவது:நடப்பு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு சரியான மரியாதையை யாரும் கொடுக்கவில்லை. அவருக்கான பணத்தையும் தரவில்லை.

ஐபிஎல்லில் அசிங்கம்

ஐபிஎல்லில் அசிங்கம்

யுவராஜ் சிங்கை முதல் கட்ட ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. ஒரு கோடிக்கு ஏலம் போனார். அது வெறும் குறைந்த தொகை தான். யுவராஜ் சிங், 2019 ஐபிஎல் ஏலத்தில் அசிங்கப்படுத்தப்பட்டார் என்று கம்பீர் கூறினார்.

Story first published: Saturday, April 20, 2019, 13:40 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
Yuvraj singh was insulted in IPL Auction says gambhir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X