For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் சாஹல்.. அணியை விட்டு நீக்க டிராவிட் முடிவு.. மாற்று வீரர் யார் ?

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாஹல், கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருவது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சாஹல் எங்கள் அணிக்கு முக்கிய வீரர் என்ற பல முறை பேட்டியில் ரோகித் சர்மா கூறி இருக்கிறார். ஆனால்,ரோகித் வைத்த நம்பிக்கையை சாஹல் உடைத்து வருகிறார்,

சாஹலுடைய பணியே ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் எடுப்பது தான், ஆனால் நிஜத்தில் ரன்கள் மட்டும் தான் செல்கிறது தவிர விக்கெட்டுகள் வீழ்வது இல்லை.

இந்தியாவின் துருப்பு சீட்டு.. பாகிஸ்தானுக்கு எமனாக விளங்கும் யுவேந்திர சாஹல்.. என்ன காரணம் தெரியுமா?இந்தியாவின் துருப்பு சீட்டு.. பாகிஸ்தானுக்கு எமனாக விளங்கும் யுவேந்திர சாஹல்.. என்ன காரணம் தெரியுமா?

ஓவரை நிறுத்திய ரோகித்

ஓவரை நிறுத்திய ரோகித்

டி20 போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் எப்போதுமே விக்கெட்டுகளை வீழ்த்த பயன்படுத்துவார்கள். நேற்று ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பினரான ஆடம் சாம்பாவே தனி ஆளாக நின்று, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். ஆனால் சாஹலோ பந்துவீசும் அழகை பார்த்துவிட்டு ரோகித் சர்மா, ஒரு ஓவருடன் அவருக்கு நிறுத்திவிட்டார்.

சாஹலின் தவறு

சாஹலின் தவறு

ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்கிய சாஹல், தற்போது அணியில் அவரது இடத்தை காப்பாற்ற போராடி வருகிறார். அதற்கு காரணம் சாஹல் தனது பந்துவீச்சில் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து வருகிறார். லெக் ஸ்பின்னர்கள் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றால், பந்தின் வேகத்தை குறைத்து வீச வேண்டும்.

சரி செய்வாரா சாஹல்

சரி செய்வாரா சாஹல்

மேலும் பந்தை தூக்கி வீச கூடாது. அதாவது Flight செய்ய கூடாது. அப்படி வீசினால், அது பேட்ஸ்மேன்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இறங்கி வந்து அடித்துவிடுவார்கள். மேலும் லேக் ஸ்ப்பினரின் முக்கிய ஆயுதமான கூக்ளி பந்துகளை சாஹல் அதிகம் வீச வேண்டும். இதனை சரி செய்யாத வகையில் சாஹல் ஓவரில் ரன்கள் போக தான் செய்யும்.

சாஹல் நீக்கம்?

சாஹல் நீக்கம்?

இந்த நிலையில், சாஹல் தொடர்ந்து சோபிக்க தவறி வருவதால், அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அஸ்வின் அல்லது ரவி பிஸ்னாயை அணியில் சேர்க்க டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் கூட சாஹல் அணியில் இடம்பெறுவது சந்தேகமே.

Story first published: Saturday, September 24, 2022, 17:22 [IST]
Other articles published on Sep 24, 2022
English summary
Yuzi Chahal commiting same mistake might cost his place
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X