ரோகித்-சாஹல் நட்பு
சாஹல் ஆர்சிபி அணியில் விளையாடி இருந்தாலும், அவருக்கும் ரோகித் சர்மாவுக்கும் தனி நட்பு உள்ளது. இந்திய அணியில் விளையாடும் போதே ஆட்டம் முடிந்த பிறகு சாஹல், ரோகித்தை ஓட்டுவதும், ரோகித் அதற்கு பதிலடி தருவதும் என பல்வேறு சம்பவங்கள், வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.
ரோகித் ஆதரவு
சாஹல், தற்போது மீண்டும் இந்திய அணிக்கு வந்திருப்பதும் ரோகித் சர்மாவின் முயற்சியால் தான். அண்மையில் நடந்து முடிந்த தொடர்களில் கூட சாஹல் எங்கள் அணிக்கு மிக முக்கியமான வீரர், அதனை அவர் உணர்ந்து செயல்படுவார் என நம்புகிறேன். அவருக்கு கேப்டனாக உரிய ஆதரவு வழங்குவேன் என்று ரோகித் சர்மா பேட்டியில் கூறினார்.
சாஹல் வாழ்த்து
இந்த நிலையில், இன்று ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து வெளியிட்டுள்ள சாஹல், என்னுடைய ரோகித் சர்மா மீது நான் வைத்துள்ள அன்பும், மரியாதையும் எப்போது களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிறையட்டும் என்று சாஹல் பதிவிட்டு இருந்தார்.
ரொமன்டிக் போட்டோ
ஆனால், சாஹல் வெளியிட்டுள்ள போட்டோவில் ரோகித் சர்மா, சாஹலுக்கு பூக்களை தருவது போல் பதிவிட்டு இருந்தார். இந்த போட்டோவுக்கு கமெண்ட் செய்துள்ள ரோகித் மனைவி ரித்மிகா, இந்தப் போட்டோ என்னை ஏதோ செய்கிறது. இந்த போட்டோவில் என்னை விட நீங்கள் இருவரும் ரொமன்டிக்காக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்களிடையே தற்போது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.